Sunday, April 28, 2024
- Advertisement -
Homeசினிமாஅதே டெய்லர் அதே வாடகையா?.. ஜெயிலர் திரைப்படம் பற்றிய அனிருத் ட்விட்டை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

அதே டெய்லர் அதே வாடகையா?.. ஜெயிலர் திரைப்படம் பற்றிய அனிருத் ட்விட்டை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாக இருக்கும் ஜெயிலர் திரைப்படம் படுகின்ற பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கான முன் பதிவு உன் தற்போதைய துவங்கி விட்டது. ரசிகர்களிடம் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய சினிமா திருவிழாவாக இருக்கும் என்று சினிமா விமர்சகர்கள் கனித்து வருகின்றனர் .

- Advertisement -

தர்பார் மற்றும் அண்ணா திரைப்படங்களின் தோல்வியை தொடர்ந்து ஒரு வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் நடித்திருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர் . பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பிறகு தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் சூப்பர் ஸ்டாரை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் நெல்சன் திலீப்குமார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஒரு பான் இந்தியா சினிமாவாக உருவாகியிருக்கிறது.

இந்தத் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் உடன் மோகன்லால், சிவராஜ்குமார், வினயன், தமன்னா, ஜாக்கி சரஃப், ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார் . இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் நிலையில் கடந்த வாரம் மிகப் பிரம்மாண்டமாக ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.

- Advertisement -

மேலும் சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இது இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் மேலும் அதிகரித்தது . சூப்பர் ஸ்டாரின் திரைத்துறை வரலாற்றில் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என்று ரசிகர்களும் திரை விமர்சகர்களும் கணித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அனிருத் தனது சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் ஒரு செய்தியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

தலைவரின் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று அனிருத் தனது ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். இந்தப் பதிவை மறுபதிவு செய்து இருக்கும் ரசிகர்கள் அவர் தர்பார் படத்திற்கு வாழ்த்திய பதிவையும் இதோடு இணைத்து ஜெயிலர் திரைப்படமும் தர்பார் திரைப்படம் போன்று தான் இருக்குமா இதுவும் உருட்டா என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Most Popular