Monday, October 7, 2024
- Advertisement -
Homeசினிமாஐஸ்வர்யா ராஜேஷ் சொப்பன சுந்தரி பட குழுவின் புதிய அப்டேட்!

ஐஸ்வர்யா ராஜேஷ் சொப்பன சுந்தரி பட குழுவின் புதிய அப்டேட்!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் சொப்பன சுந்தரி. இந்த திரைப்படத்தின் சூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த திரைப்படம் மார்ச் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்படத்தை எஸ் எஸ் சார்லி என்பவர் இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் மைம் கோபி கருணாகரன் சாரா  உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தினை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

- Advertisement -

டார்க் காமெடி கதையம்சத்துடன் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மூன்று நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில்  படக் குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ட்ரெய்லர் வெளியீட்டின் போது பேசிய படத்தின் இயக்குனர் இது டார்க்க முடியுடன் கலந்த ஆக்சன் படம் என தெரிவித்தார். கிராமத்தில் இருக்கக்கூடிய கதாநாயகி ஐடி  துறையில் வேலை பார்க்கும் கதாநாயகனை திருமணம் செய்து கொண்ட பின் ஏற்படும் வாழ்க்கை மாற்றங்களை  மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தற்போது டார்க் காமெடி ஜன்னலில் தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன. அதைப் போன்ற ஒரு படம்தான்  சொப்பன சுந்தரி . சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ரன் பேபி ரன் மற்றும்  மலையாள படத்தின் தமிழ் ரீமேக்  ஆகிய படங்களும் எதிர்பார்த்த அளவிற்கே வெற்றி பெறவில்லை. டிரைவர் ஜமுனா என்ற திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்றது. அந்த திரைப்படத்தில் வித்தியாசமான  கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே ஹீரோயினை மையமாகக் கொண்ட கதைக்களங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார் . இத்தனை படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

இந்தத் திரைப்படத்தினை ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து  தயாரித்திருக்கிறது. லாக்கப் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எஸ் எஸ் சார்லஸ் இந்த திரைப்படத்தை  எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் படத்திற்கு அனுப்பும் வேலைகளில் முழு வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது படக்குழு.

- Advertisement -

இந்தப் திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதால்  தயாரிப்பு நிறுவனம் அடுத்த படத்திற்கான வேலைகளை இப்போதே துவங்கி விட்டதாக தெரிகிறது. சொப்பன சுந்தரி படத்தை தயாரித்திருக்கும் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தங்களது இரண்டாவது ப்ரொடக்சன் காண அறிவிப்பை நேத்து ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தை அருண்.கே  இயக்கப் போவதாகவும் அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனைப் பற்றிய அறிவிப்பை ட்விட்டரில் போஸ்டரின் மூலம்  அறிவித்திருக்கிறது தயாரிப்புக் குழு. இதன் காரணமாக இப்பொழுது இதப்பற்றி எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இப்போதே தொற்றிக் கொண்டுள்ளது.

Most Popular