சினிமா

“என் படத்தை குறை கூறும் தகுதி உலக நாயகனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை”! – அல்போன்ஸ் புத்ரன் பதிலடி!

தமிழ் மற்றும் மலையாள சினிமா உலகில் முன்னணி இயக்குனராக இருந்து கொண்டிருப்பவர் அல்போன்ஸ் புத்ரன் . இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான நேரம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் . 2015 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது

இந்தத் திரைப்படம் ஆனது மலையாள சினிமா மட்டுமல்லாது தமிழ் தெலுங்கு என அனைத்து தென்னிந்தியாவிலும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது சென்னையில் மட்டும் இந்த படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சாய் பல்லவி அதன் பிறகு தென் இந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார் .

Advertisement

அல்போன்ஸ் புத்ரன் உலக நாயகன் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகர் ஆவார் . சமீபத்தில் இவரது இயக்கத்தில் நயன்தாரா மற்றும் பிரித்திவிராஜன் நடிப்பில் வெளியான கோல்ட் என்ற திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு பின் வெளியான அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை . வெளியானது. ஆனால் இந்த திரைப்படமானது எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை . இந்நிலையில் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான அல்போன்ஸ் புத்திரனுக்கு கமல்ஹாசனை சந்திக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது .

சமீபத்தில் தன்னுடைய குருநாதரை சென்னையில் சந்தித்த அவர் அந்த அனுபவம் குறித்து தன்னுடைய சமூக வலைதளத்தில் அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுடன் தன் மகிழ்ச்சியை கொண்டாடி இருக்கிறார். சினிமா துறையின் எவரெஸ்ட் சிகரத்தை சந்தித்தது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம். அவருடன் சினிமா பற்றி கலந்துரையாடினேன். அவர் சினிமாவைப் பற்றி கூறிய விஷயங்களை என்னுடைய டைரியில் குறித்து வைத்துக் கொண்டேன். ஒரு ஆசிரியராக அவருக்கு எந்த பயமும் இல்லை ஆனால் ஒரு மாணவராக அவர் கூறும் ஏதேனும் ஒரு விஷயங்களை குறிப்பெடுக்காமல் விட்டு விடுவேனோ என்று எனக்கு தான் பயமாக இருந்தது. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்களுக்கு என்னுடைய நன்றி” என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

தற்போது வெளியான இவரது கோல்டு படம் பற்றி இணையதளத்தில் ரசிகர்கள் மோசமாக விமர்சித்து வந்தனர்.இதில் ஒரு ரசிகருக்கு பதில் அளித்துள்ள அல்போன்ஸ்” படம் நல்லா இல்லை என்று கூற வேண்டாம் அந்தப் படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறுங்கள் . என் படம் நன்றாக இல்லை என்று கூறும் தகுதி உலக நாயகன் கமல்ஹாசனை தவிர வேறு யாருக்கும் இல்லை. ஏனென்றால் என்னை விடவும் மற்றும் எல்லாரை விடவும் அவர்தான் சினிமாவை நன்கு அறிந்தவர் என்று பதிலளித்திருக்கிறார். இது இணையதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பலரும் பலவாறு அல்போன் செய்யும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top