Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஆர்யாவை வில்லனாக வைத்து படம் இயக்கும் பா.ரஞ்சித்.. சார்பட்டா பரம்பரை 2 என்ன ஆனது ?...

ஆர்யாவை வில்லனாக வைத்து படம் இயக்கும் பா.ரஞ்சித்.. சார்பட்டா பரம்பரை 2 என்ன ஆனது ? அப்டேட்ஸ் வெளியீடு.. !

தமிழ் சினிமாவில் அட்டகத்தி, காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை போன்ற வெற்றித் திரைப்படங்களைத் தொடர்ந்து கொடுத்தவர் இயக்குனர் பா.ரஞ்சித். தன் படங்களின் நல்ல அரசியலும் பேசுபவர். ரஞ்சித் – விக்ரம் கூட்டணியில் தங்கலான் திரைப்படம் ரீலீசுக்கு காத்திருக்கிறது.

- Advertisement -

இந்த ஆண்டு பொங்கலுக்கே இப்படம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இடையில் விக்ரமுக்கு ஷூட்டிங்கில் அடி பட அப்படி இப்படி என தள்ளிப் போனது. ஒரு வழியாக ஷூட்டிங் முடிந்தாலும் இன்னும் திரைக்கு வரவில்லை. அதற்க்கு முக்கியக் காரணமாக தேதிகள் இல்லாததால் தான்.

ஆறு மாதங்களாக வறட்சியாக இருந்த கோலிவுட், தற்போது கையில் இருந்து அனைத்துப் பெரிய படங்களும் ஒரே சமயத்தில் வருவதால் தேதிகள் இடிக்கின்றன. இந்தியன் 2, வணங்கான், ராயன், கோட் என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளன. இது தவிர பேன் இந்தியா படங்களான கல்கி, புஷ்பா 2 என அனைத்தும் அடுத்த 2 மாதங்களில் வெளியாகவுள்ளன.

- Advertisement -

இத்தகு சூழலில் தங்கலான் வெளியானால் வசூலில் அடி வாங்கும் என்பதால் காத்திருக்கிறார்கள். இந்தப் படம் வெளியாகும் வரை காத்திருப்பது சரியாகாது என இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்தப் படத்துக்கு நகர்ந்துவிட்டார். அவரின் அறிமுகக் படத்தில் ஹீரோவாக நடித்த அட்டகத்தி தினேஷை வைத்து ஒரு சிறிய பட்ஜெட் படத்தை இயக்குகிறார்.

- Advertisement -

பா.ரஞ்சித் – தினேஷ் ஜோடி சேரும் இப்படத்துக்கு ‘ வேட்டா ‘ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இப்படத்தில் வில்லனாக முன்னனி கதாநாயகனை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார் ரஞ்சித். அவர் வேறு யாரும் இல்லை ஆர்யா தான். ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை எனும் மெகா ஹிட் படத்தைக் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து இருவரும் சார்பட்டா பரம்பரை 2 படத்துக்கு இணைவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்க்கு முன்பே கைக் கோர்த்துள்ளனர். தினேஷ் கதாநாயகன் அவருக்கு வில்லனாக ஆர்யா என்பது சற்று வித்தியாசமாக உள்ளது. எனினும் நிச்சயம் நல்லப் படமாக ரஞ்சித் உருவாக்குவார். இப்படம் முடிந்தவுடன் சார்பட்டா பரம்பரை 2 படத்தில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular