சினிமா

பெப்சி உமாவா இப்படி மாறிட்டாங்க! அடையாளமே தெரியலையே

இப்பொழுதெல்லாம் நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி பொழுதை கழித்து வருகிறார்கள். இதனால் இப்பொழுது பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சி வெறும் பெருமைக்குரிய பொருளாக மாறிவிட்டது. அதில் வரும் நிகழ்ச்சிகளை எல்லாம் விரும்பி பார்ப்பதை மக்கள் குறைந்து விட்டார்கள்

Advertisement

ஆனால் 90’ஸ் கிட்ஸ் களின் வாழ்க்கை முறையை முற்றிலும் மாறுபட்டது. அவர்களுக்கு பொழுதை களிக்க இருந்தது தொலைக்காட்சி மட்டும்தான். அதில் வரும் எல்லா நிகழ்ச்சிகளையும் நேரம் தவறாது சரியாக பார்த்து மகிழ்ந்து வந்தார்கள். ஆனால் அப்பொழுது விரல்  விட்டு எண்ணும் அளவிற்கு தான் தொகுப்பாளர்கள் இருந்தார்கள். அதில் பலர் தற்பொழுது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள்.
ஆனால் இன்று வளர்ந்து இருக்கும் சமூக வலைத்தளங்கள் அவர்களை மீண்டும் கண்டுபிடித்து நமக்கு அடையாளம் காட்டி வருகிறது.

அதேபோல் பல ஆண்டுகளாக நம் கண்களில் படாமல் மறைந்து இருந்த ஒரு முக்கியமான பிரபலத்தை சமூக வலைத்தளம் நமக்கு அடையாளம் காட்டி இருக்கிறது.சன் டிவியில் ஒளிபரப்பாகும் பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய 90ஸ் கிட்ஸ் தொகுப்பாளினியான பெப்சி உமாவின் தற்பொழுது உள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Advertisement

நிறைய திரைப்படங்களில் கூட பெப்சி உமாவை பாராட்டி பேசுவது போன்ற காட்சிகள் அப்பொழுது வந்த திரைப்படங்களை இடம்பெற்று இருக்கும். உதாரணத்திற்கு தீனா திரைப்படத்தில் கூட தல அஜித் பெப்சிமாவை பிடிக்கும் என்று கூறியிருப்பார். அப்பொழுதெல்லாம் தொகுப்பாளினி என்றாலே நினைவில் வருவது பெப்சி உமா மட்டும்தான் அப்படிப்பட்ட பெப்சி உமா தற்பொழுது அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.

அழகு என்றுமே நிரந்தரம் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். நமது திறமையும் நாம் நடந்து கொள்ளும் விதமும் தான் பிறர் மனதில் நம்மை நிக்க வைக்கின்றது .அந்த வகையில் பெப்சியுமாவை இப்படி பார்த்தாலும் அவரை அப்பொழுது பார்த்த அதே உணர்வு தான் இப்பொழுதும் தோன்றுகிறது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top