Friday, April 26, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாசன் டிவியிலும் ஜெயிலரை முந்திய லியோ.. பொங்கலுக்கு ஒளிபரப்பான படங்களின் டிஆர்பி என்ன?

சன் டிவியிலும் ஜெயிலரை முந்திய லியோ.. பொங்கலுக்கு ஒளிபரப்பான படங்களின் டிஆர்பி என்ன?

தமிழ் சினிமாவில் தற்போது மோதல் என்றால் அது விஜய் மற்றும் ரஜினிக்கு இடையே தான் நடைபெற்று வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ரஜினி திரைப்படங்களின் வசூலை விஜய் முறியடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் முதல் இடத்தை மீட்க ரஜினி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சூப்பர் ஸ்டார்களை வைத்து ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்தார். அது 610 கோடி ரூபாய் வசூலை பெற்றது. இதனால் ரஜினி நம்பர் ஒன் இடத்தை மீண்டும் பிடித்து விட்டார் என்று அவருடைய ரசிகர்கள் நம்பினர்.

ஆனால் தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியானது. இது கலவையான விமர்சனத்தை பெற்றாலும்,சக்கை போடு போட்டு ஜெயிலர் வசூலை முறியடித்து 625 கோடி ரூபாய் வரை வசூல் சாதனையை படைத்தது. எனினும் இந்த தோல்வியை ரஜினி ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் சன் டிவியில் கடந்த தீபாவளி அன்று ஜெயிலர் திரைப்படம் ஒளிபரப்பானது. அப்போது டிஆர்பி யில் 15 புள்ளி 5 9 என்ற அளவில் தொட்டது. ஆனால் லியோ திரைப்படம் தற்போது பொங்கல் அன்று போடப்பட்டது அதன் டிஆர்பி வெளியாகியிருக்கிறது. லியோ திரைப்படம் பதினாறு புள்ளி முப்பது டிஆர்பியை பெற்று சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் ஜெய்லரை லியோ சன் டிவியில் முறியடித்து இருக்கிறது.

- Advertisement -

இதேபோன்று மாட்டுப் பொங்கல் அன்று சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஜிகர்தண்டா 2 திரைப்படம் 10 புள்ளி 21 என்ற டிஆர்பியை பெற்று இருக்கிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பான மார்க் ஆண்டனி திரைப்படம் இரண்டு புள்ளி எட்டு இரண்டு என்ற டிஆர்பியை பெற்று இருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான இருகப் பற்று திரைப்படம் 1.86 டிஆர்பியை பெற்று இருக்கிறது. ஜீ தமிழில் போடப்பட்ட ஹிப் ஹாப் ஆதி நடித்த வீரன் திரைப்படம் 1.81 டிஆர்பி பெற்று இருக்கிறது. ஜீ தமிழில் போடப்பட்ட ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் 1. 65 டிஆர்பியை பெற்றிருக்கிறது. கடந்த சனிக்கிழமை கலைஞர் டிவியில் போடப்பட்ட மகான் திரைப்படம் 0. 39 டிஆர்பிஐ தான் பெற்றிருக்கிறது.

Most Popular