Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமா"பொன்னியின் செல்வன்-2" ட்ரெய்லர் புதிய அப்டேட்!

“பொன்னியின் செல்வன்-2” ட்ரெய்லர் புதிய அப்டேட்!

மணிரத்தினம் இயக்கத்தில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இந்தத் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது . விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தத் திரைப்படத்திற்கு மிகப்பெரிய ஒரு வெற்றியும் அங்கீகாரம் கிடைத்தது. இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

- Advertisement -

லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கிய இந்த திரைப்படத்தில் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி சரத்குமார் பார்த்திபன் ஜெயராம் பிரபு விக்ரம் பிரபு பிரகாஷ்ராஜ் ஐஸ்வர்யா ராய் த்ரிஷா ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு வரலாற்றுப் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் இத்தனை படத்தின் இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாவது முன்னிட்டு படக்குழுவினர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை மார்ச் 20 ஆம் தேதி வெளியிட்டனர். இளங்கோ கிருஷ்ணனின் வரிகளில் ஏ ஆர் ரகுமானின் மனதை வருடும் இசையில் சக்தி ஸ்ரீ கோபாலன் இந்த பாடலை பாடி இருந்தார். இந்தப் பாடல் வெளியானது முதல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது . வெளியான நாள் முதல் இதுவரை 6. 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்தப் பாடல் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து இருக்கிறது.

- Advertisement -

திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி வழியாக இருப்பதால் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து படத்திற்கான பிரமோஷன் பணிகள் தொடங்கும் என படக்குழுவின் அருட்தெருவித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் ஏப்ரலில் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புது படத்தில் இருக்கும் மீதி இரண்டு பாடல்களும் வெளியிடப்படும் எனவும் தெரிகிறது. தற்போது இத்தனை படத்தின் டிரைலரை பற்றிய முக்கிய செய்தி இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது. அந்த செய்திகளின்படி ட்ரெய்லர் கட் பணிகள் முடிந்து விட்டதாகவும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ட்ரெய்லரும் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் 3.24 நிமிடங்கள் ஓடக்கூடியதாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. மற்ற ட்ரெய்லர்களுடன் பார்க்கும்போது இதன் நீளம் சற்று அதிகம். ஆனால் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டிரைலரும் இதே அளவு தான் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாடல் வெளியீட்டிற்கு பிறகு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் ஆகியோர் லண்டன் சென்று இத்திரைப்படத்திற்கு அனுப்பு சன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் முதல் வாரத்தில் ட்ரெய்லர் வழியாக இருப்பதால் பொன்னியின் செல்வன் மற்றும் தமிழ் ரசிகர்கள் இதனை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Most Popular