தமிழ் சினிமாவின் அடையாளமாக விளங்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகாது என்ற தகவல் வெளியாக்கியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவான திரைப்படம் என்ற பெருமையை பெற்ற பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக வெளியிடப்படுகிறது.
முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில் ரிலீஸ் ஆகி தமிழகத்தில் வசூல் சாதனையை செய்தது. இதுவரை வெளியான படங்களில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் பெற்றதோடு உலகம் முழுவதும் 500 கோடி வசூலை செய்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் தமிழ் சினிமாவில் முதல் ஆயிரம் கோடி வசூல் சாதனை செய்த படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் தொடர்பாக காலையிலிருந்து தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.
குறிப்பாக தெலுங்கு சினிமாவை சேர்ந்த சிலர் படம் தொடர்பாக தேவையற்ற கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.
மேலும் பொன்னியின் செல்வன் 2 நினைத்த தேதியில் ரிலீஸ் ஆகாது என்றும் படம் தள்ளிப் போகும் என பரப்பப்பட்டு வருகிறது. இதனிடையே இதற்கு பதிலடி கொடுத்துள்ள பட குழு பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் மாதம் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து படம் குறித்து விளம்பர நிகழ்ச்சிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேவையற்ற வதந்தியை நம்ப வேண்டாம் எனவும் பட குழு கேட்டுள்ளது. தெலுங்கில் இருந்து ரிலீஸ் ஆகும் டிரிபிள் ஆர் ,பாகுபலி போன்ற படங்கள் தமிழகத்தில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால் தமிழ் படங்களை தெலுங்கு ரசிகர்கள் தேவை இன்றி பழி சுமத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.