Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாபொன்னியின் செல்வன் 2 அப்டேட் ! ரீலீஸ் தேதி என்ன தெரியுமா ?

பொன்னியின் செல்வன் 2 அப்டேட் ! ரீலீஸ் தேதி என்ன தெரியுமா ?

இந்திய மற்றும் தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம் அவரது இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்தது பொன்னியின் செல்வன் திரைப்படம் . இந்தத் திரைப்படம் ஆனது கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இந்தத் திரைப்படத்தை எடுக்க முயற்சித்தும் அவர்களால் எடுக்க முடியவில்லை . இதனை மணிரத்னம் அவர்கள் திரைப்படமாக உருவாக்கி சாதித்து காட்டினார் . இந்தத் திரைப்படத்தில் சியான் விக்ரம்,கார்த்தி ,ஜெயம் ரவி ,விக்ரம் பிரபு,பார்த்திபன்,சரத்குமார்,ஜெயராமன் பிரகாஷ் ராஜ் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் ஐஸ்வர்யா ராய்,திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி போன்ற முன்னணி நாயகிகளும் நடித்திருந்தனர் . இந்தப் படமானது 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது .

இந்தப் படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டிருந்தது . முதல் பாகம் செப்டம்பர் மாதம் வெளியான நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடமிருந்து கொண்டிருந்தது . இதன் இரண்டாம் பாகமானது 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறைகளின் போது வெளியாகும் என்று பேசப்பட்டாலும் படக் குழுவினரின் தரப்பிலிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் என லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது .

- Advertisement -

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என்று அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

- Advertisement -

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்திலும் உள்ளனர்.இந்தப் பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார் . முதல் பாகத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது . நிலையில் இரண்டாம் பாகத்தின் பாடல்களுக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி திரையிடப்படும் என்று படக்குழுவினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

இந்தத் திரைப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து இருந்தார் . தோட்டா தரணி அவர்கள் கலை இயக்குனராக பணியாற்றி இருந்தார் . இந்தப் படத்தின் பின்னணி இசை ஒளிப்பதிவு மற்றும் செட் வடிவமைப்புகள் ரசிகர்களிடம் வெகுவாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . பொன்னியின் செல்வன் ஒன்று படம் முடியும் இறுதிக் காட்சிகளிலேயே அடுத்த படத்திற்கான ஆவலை தூண்டும் வகையில் முடிந்திருந்தது . இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் .

Most Popular