சினிமா

“யோவ்! நீ போய் உக்காரு” நடிகர் என்று பாராமல் மேடையில் திமிரை காட்டிய தயாரிப்பாளர் கே ராஜன்! கூனிக்குறுகி போன சென்றாயன்!

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் காமெடி நடிகர் சென்ராயனை மேடையில் வைத்தபடி தரக்குறைவாக பேசியுள்ளார் தயாரிப்பாளர் கே. ராஜன்.

தயாரிப்பாளர் கே ராஜன் தமிழ் திரையுலகில் சற்று மதிப்புமிக்க தயாரிப்பாளராக வளம் வந்து கொண்டிருந்தவர் ஆவார். ஆனால் சமீபத்தில் அவரது நேர்காணல்கள் மற்றும் விழாக்களில் அவர் பேசும் விதம் பலரையும் முகம் சுளிக்க வைக்கும் விதமாக இருக்கிறது. குறிப்பாக சூர்யா, அஜித் குமார், விஜய், தனுஷ் உள்ளிட்ட பெரிய நடிகர்களையும் அவர் தனது பேச்சின் மூலம் தாக்கி வருகிறார்.

Advertisement

மிகப்பெரிய நடிகர்கள் இவ்வளவு சம்பளம் வாங்குவதற்கு தகுதியற்றவர்கள், தங்களது சம்பளத்தை குறைத்துக் கொண்டு தயாரிப்பாளர்களை வாழவைக்க வேண்டும். இவர்களால் தான் பல தயாரிப்பாளர்கள் தலையில் துண்டு போட்டுக் கொண்டு ஓடுகிறார்கள் என்கிற பாணியில் தொடர்ந்து தனது விவாதத்தை கொண்டு செல்வார். அதுபோன்ற ஒரு செயலை இன்று நடைபெற்ற ‘லோக்கல் சரக்கு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் செய்திருப்பது பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

காமெடி நடிகர் யோகி பாபு, நடன இயக்குனர் தினேஷ்குமார் ஆகியோர் இணைந்து நடிக்கும் ‘லோக்கல் சரக்கு’ திரைப்படத்தை டைரக்டர் எஸ்பி ராஜ்குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு விஎஸ் சுவாமிநாதன் ராஜேஷ் என்பவர் இசையமைக்கிறார். இப்படத்தினை வேலன்டினா சுவாமிநாதன் மற்றும் சிலர் தயாரிக்கின்றனர்.

Advertisement

படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 22 ஆம் தேதி நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே ராஜன், காமெடி நடிகர் சென்ராயன், இயக்குனர் மற்றும் நடிகை என சிலர் பங்கேற்றனர். படத்தில் நடித்திருந்த யோகி பாபு வெவ்வேறு படங்களில் நடித்து வருவதால் இசை வெளியீட்டு விழாவிற்கு வரவில்லை. இந்த இசை வெளியீட்டு விழாவில் கே ராஜன் பேசிய பேச்சு தற்போது இணையதளத்தில் அவருக்கு கடும் விமர்சனத்தை பெற்றுத் தந்திருக்கிறது.

ராஜன் பேசியதில், படத்தின் தயாரிப்பாளர்கள் அடங்காமல் இருக்கிறார்கள். மிகப் பெரிய நடிகர்களை வைத்து தயாரிப்பதற்கு தொடர்ந்து பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். இதன் காரணமாகத்தான் பெரிய நடிகர்கள் திமிராகவும் மெத்தனமாகவும் இருக்கின்றனர். ஆகையால் இவர்கள் தயாரிப்பதை நிறுத்த வேண்டும். பட்டினி போட்டால் தான் சரி வரும் என்கிற பாணியில் பேசினார். உடனே மேடையில் அமர்ந்திருந்த சென்றாயன் எழுந்து, “தயாரிப்பாளர்கள் தான் எங்களுக்கு வேலை கொடுக்கிறார்கள். அவர்களை தவறாக பேசாதீர்கள்.” எனக் கூறியதற்கு, “நீ போய் உட்காரு! உனக்கு ஒன்னும் தெரியாது.” என தரக்குறைவாக பேசியது ஒரு நிமிடம் அவரை கூனிக்குறுக வைத்தது. அதன்பின் அவர் அமர்ந்து கொண்டார்.

“நாம் பேசும்போது யாரும் குறுக்கே வரக்கூடாது. உங்களுக்கு பேச வாய்ப்பு கிடைக்கும்போது இதற்கு பதில் கூறுங்கள். அதுவரை அமைதியாக இருங்கள்!.” என சற்று மரியாதை இல்லாமல் பேசிய சம்பவத்தின் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top