Saturday, May 18, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாகோலிவுட் கம்பேக்.. ராயன் - தங்கலான் படங்கள் அடுத்த மாதம் மோதல்.. ரசிகர்களுக்கு விருந்து !

கோலிவுட் கம்பேக்.. ராயன் – தங்கலான் படங்கள் அடுத்த மாதம் மோதல்.. ரசிகர்களுக்கு விருந்து !

2024ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு இதுவரை இருட்டாகத் தான் இருக்கிறது. பெரிய படங்கள் அனைத்தும் இன்னும் இறுதிக் கட்டப் பணிகளில் இருப்பதால் முதல் 4 மாதங்களில் தியேட்டர்கள் அனைத்தும் வெறுமையாகத் தான் காணப்பட்டது. இதனால் ஒரு பக்கம் திரையரங்க உரிமையாளர்கள் மறு வெளியீட்டு கலாச்சாரத்திற்கு நகர்ந்துவிட்டனர்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒளியைக் கொண்டு வர அடுத்தடுத்து நம்பிக்கையான படங்கள் வெளியாகவுள்ளன. வருகிற மே 10 கவினின் ஸ்டார் படம் இப்பட்டியலில் முதலில் உள்ளது. யுவனின் மெல்லிய இசையில் கவினின் துல்லிய நடிப்பில் டிரெய்லர் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து விஜய் சேதுபதியின் மகாராஜா படமும் இந்த மாதம் வரவிருக்கிறது.

ஜூன் மாதம் தான் உண்மையான சம்பவங்கள் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. இரண்டு பெரிய படங்கள் மோத அதிக வாய்ப்புகள் உள்ளன. பா.ரஞ்சித் – விக்ரம் கம்போவில் உருவாகியுள்ள தங்கலான் படமும் தனுஷின் இயக்கத்தில் அவர், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள ராயன் படமும் தான் அடுத்த மாதம் 13 மோதவுக்கதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்புக்குள் கொண்ட படங்களில் தங்கலான் டாப்பில் உள்ளது. இதுவரை வெளியான சின்ன சின்ன டீசர்கள் பலத்த வரவேற்பைப் பெற்றது. பொங்கலுக்கே இப்படம் வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏப்ரல், மே என தொடந்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அடுத்த மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதிகாரபூர்வ செய்திகள் விரைவில் வரும்.

- Advertisement -

இதற்குப் போட்டியாக தனுஷ் எழுதி இயக்கியுள்ள ராயன் படம் வருகிறது. நட்சத்திர பட்டாளம் கொண்ட இப்படம் கேங்ஸ்டர்  கதைக்களத்தைக் கொண்டது. படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படத்தைப் பார்த்துவிட்டு மிரண்டுப் போய்விட்டார் என தகவல்கள் வந்தன. தனுஷின் கதை & திரைக்கதை என்பதால் நிச்சயம் இப்படத்தின் மேல் நம்பிக்கை வைக்கலாம்.

இந்தியன் – 2 திரைப்படம் ஜூன் வெகியாகவிருந்து தள்ளிப் போவதால் அந்தத் தேதியில் இந்த இரண்டு படங்கள் வரவுள்ளன. ஒரே சமயத்தில் வந்தால் வசூல் பாதிக்கும் எனக் கருதினால் இரண்டு வார இடை வெளியில் இரண்டுமே வெளியாகும். மொத்தத்தில் ஜூன் மாதத்தில் இரண்டு பெரிய படங்கள் நம் மக்கள் நிச்சயம்.

Most Popular