நடிகர் ராகவா லாரன்ஸ் என்றாலே பெரும்பாலானோரின் நினைவுக்கு வருவது பேய் படங்கள் தான். முனி 1 இல் துவங்கி காஞ்சனா 3 வரை கடந்த 10 ஆண்டுகளில் 4 திகில் படங்களைக் கொடுத்து நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளார். அனைத்துப் படங்களையும் ராகவா லாரன்ஸே இயக்கியுள்ளார்.
எல்லாப் படன்களின் இறுதியிலும் அடுத்தப் பாகம் வருவதாக அறிவித்துவிட்டு தான் படத்தை நிறைவு செய்வார். 2019இல் காஞ்சனா 3 பிறகு எந்தப் படமும் அப்படி வரவில்லை. காரணம் ராகவா லாரன்ஸ் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில் பிஸியாக உள்ளார். பெரிய பெரிய படங்களெல்லாம் தற்போது அவருக்கு கிடைத்துள்ளது.
சமீபத்தில் ஜிகர்தண்டா 2 படத்தில் சிறப்பான நடிப்பற்றலை வெளிக்காட்டி மக்களின் பாராட்டுகளைப் பெற்றார். அப்படம் சிறப்பாக ஓட இவரும் ஓர் பெரிய பங்காற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வில்லனாக நடிக்கிறார்.
இந்த நிலையில் தனது பேய் படங்களையும் மறுபக்கம் துகங்கவுள்ளார். கடங்க 2 வருடங்களாக தமிழ் சினிமாவில் பேய் படங்களின் எண்ணிக்கை குறைந்தது. 2021இல் அரண்மனை 3 பெரிதாக மக்களைக் கவரவில்லை. அதன் பின்னர் ஆக்க்ஷன் படங்கள் தான் கோலிவுட்டில் அதிகமாக வந்தது. ஆனால் இந்த ஆண்டு எந்த படமும் தமிழில் பெரிதாக ஓடாத நேரத்தில் சுந்தர் சியின் அரண்மனை 4 ஓர் ஆறுதலாக வந்தது.
முந்தையப் படங்களை விட இது நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் வர படம் 100 கோடி வசூலை அள்ளியது. இதனைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் அவர்களும் தன் பங்குக்கு முனி 5 படத்தை துவங்கவுள்ளார். இப்படத்தை தானே தயாரித்து தானே இயக்குகிறார். வருகிற செப்டம்பர் மாதம் இதன் ஷூட்டிங்கை பிளான் செய்துள்ளார்.
கூலி படத்துக்கு முக்கியத்துவம் அளித்து எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போது முனி 5 படத்தின் வேலைகளை மேற்கொள்ள உள்ளார். தனது தயாரிப்பு என்பதால் எந்த வுத பாதிப்பும் அழுத்தமும் அவருக்கு இருக்காது. அடுத்த ஆண்டு முனி 5 வருவது உறுதி.