நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல நடிகர்களும் பிரபலங்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமலஹாசன் போன்ற பிரபலங்கள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
அப்படி விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் விஜயகாந்த் பற்றியும் அவருடன் தனக்கு இருந்த நட்பினை பற்றியும் பத்திரிகையாளர்களிடம் சிலவற்றைக் கூறியிருக்கிறார்.
கன்னியாகுமாரி ஷூட்டிங் இல் இருந்து நேரடியாக இங்கு வந்திருப்பதாகவும் நேற்றே வர வேண்டி இருந்தது வர முடியவில்லை என்பதையும் குறிப்பிட்ட பிறகு விஜயகாந்த் பற்றி பேச தொடங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
விஜயகாந்த் உடன் பழகிய அனைவருக்குமே அவரைப் பற்றி கூற ஆயிரம் நினைவுகள் இருக்கும் .அதிலும் முக்கியமாக அவருடைய நட்பை பற்றி கூற வேண்டும் நட்புக்கு இலக்கணம் என்றால் அது நடிகர் விஜயகாந்த் தான் என்று அவரை பெருமையாக பேசி இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அவருடன் ஒருமுறை பழகி விட்டால் வாழ்க்கை முழுவதும் அவரை மறக்கவே முடியாது .அப்படி ஒரு குணம் அவரிடம் இருந்தது. அதனால் தான் அவருக்கு அதிகமாக நண்பர்கள் இருக்கிறார்கள் அவருக்காக உயிரையே கொடுக்கும் அளவிற்கு அவருக்கு நண்பர்கள் உண்டு.
அவர் நண்பர்கள் மீதும் கோபம் கொள்வார் ,அரசியல்வாதிகள் மீதும் கோபம் கொள்வார், சாதாரண மக்கள் மீது கூட கோபம் கொள்வார் ஆனால் அவர் மீது யாருக்கும் கோபம் ஏற்படாது அதற்கு காரணம் அவருடைய கோபத்தில் கண்டிப்பாக ஒரு நியாயம் இருக்கும் கொஞ்சம் கூட சுயநலம் இருக்காது அவ்வளவு அன்பு நிறைந்த மனிதர்.
தைரியத்திற்கும் வீரத்திற்கும் நடிகர் விஜயகாந்த் ஒரு இலக்கணம் என்று கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் வாழ்வில் நடந்த இரண்டு சம்பவங்களை பகிர்ந்திருந்தார்.
சில வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சுயநினைவின்றி ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்பொழுது ரசிகர்களும் பொதுமக்களும் மருத்துவமனையை சுற்றி கூட்டம் கூட தொடங்கி விட்டார்கள். அதனால் மிகவும் தொந்தரவு ஏற்பட்டது .
அதை காவலர்களால் கூட தடுக்க முடியவில்லை ஆனால், இரண்டே நிமிடத்தில் வந்து கூட்டத்தை கலைத்து அந்த இடத்தையே அமைதி படுத்தினார் மேலும் எனக்கும் மருத்துவமனைக்கு பக்கத்திலேயே ரூம் போடுங்கள் யார் வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தைரியம் கூறினார்.
அதேபோல் நடிகர் சங்க விழாவிற்காக மலேசியா சென்ற போது விமான நிலையத்தில் என்னுடைய ரசிகர்கள் என்னை சூழ்ந்து விட்டார்கள் .என்னால் அதிலிருந்து வெளிவரவே முடியவில்லை. எனக்காக பேருந்து காத்துக் கொண்டிருந்தது .அந்த நிலையில் பேருந்தில் அமர்ந்திருந்த விஜயகாந்த் இறங்கி வந்து அனைவரையும் நகர்த்தி விட்டு .எனக்கு ஒரு பாதையை ஏற்படுத்தி என்னை பூ போல கொண்டு வந்து பேருந்தில் ஏத்தினார். பின் என்னிடம் உங்களுக்கு ஒன்னும் ஆகவில்லையே என்றும் விசாரித்தார். இப்படி ஒரு வீரம் மிக்க மனிதர் தான் நடிகர் விஜயகாந்த்.
நடிகர் விஜயகாந்துக்கு கேப்டன் என்ற பெயர் மிகவும் பொருத்தமானது 71 பால்கள் ,பல பவுண்டரிஸ், பல சிக்ஸர்ஸ், நூற்றுக்கணக்கான ரண்களை குவித்து மக்களை மகிழ்வித்து, உலகம் என்ற ஃபீல்டை விட்டு சென்று விட்டார் நடிகர் விஜயகாந்த் அப்படி ஒரு மனிதரை இந்த நிலையில் பார்ப்பதற்கு மனது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்பதை இரண்டு முறை பேசி முடிப்பதற்கு கூறிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
வாழ்ந்தவர் கோடி வீழ்ந்தவர் கோடி மனதில் நிற்பது யார்? விஜயகாந்த் வாழ்க விஜயகாந்த் வாழ்க விஜயகாந்த் நாமம் என்று கூறி விடை பெற்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்