சினிமா

தொடரும் வெற்றி.. சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா.. எத்தனை கோடி தெரியுமா?

திரையுலகில் கன்னடம் மற்றும் தெலுங்கில் கதாநாயகியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தானா தற்பொழுது முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வலம் வருகிறார். இவருக்கு தமிழில் முதல் படம் என்றால் அது கார்த்திக் நடித்த சுல்தான் திரைப்படம் தான். ஆனால் ராஸ்மிகா மந்தானாவிற்கு அது அறிமுகப்படம் அல்ல காரணம். தெலுங்கில் விஜய் தேவர் கொண்டவுடன் அவர் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டது.

Advertisement

அந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தானாவின் நடிப்பை கண்டு அவருக்கு தமிழிலும் அப்பொழுதே ரசிகர்கள் குவிய தொடங்கி விட்டார்கள். ராஷ்மிகா மந்தானா தமிழில் தன் முதல் படத்தை நடிக்கும் பொழுதே தனக்கு என்று ரசிகர் பட்டாளத்தை கொண்டு தான் நடித்தார்.தொடர்ந்து தமிழ்,தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என்று பல மொழிகளில் அல்லு அர்ஜுனா நடிப்பில் புஷ்பா திரைப்படத்தின் கதாநாயகியாகவும் ராஷ்மிகா மாந்தானா நடித்திருந்தார்.

புஷ்பா திரைப்படத்திலும் ராஷ்மிகா மந்தானாவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. அந்தப் படத்தில் கதாநாயகனான அல்லு அர்ஜுனை சாமி சாமி என்று கூப்பிடுவது ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் கொண்டாடப்பட்டது. அந்தப் பாடலில் ராஷ்மிகா மந்தானாவின் நடனம் ரசிகர்களிடையில் பெரிதும் போற்றப்பட்டது.

Advertisement

இந்த நிலையில் தற்பொழுது ராஷ்மிகா மந்தானா சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். ராஷ்மிகா மந்தானாவை ரசிகர்கள் நேஷனல் கிரஸ் என்று அழைப்பார்கள். தொடர்ந்து வெற்றியை ராஷ்மிகா சந்தித்தாலும்
அவருடைய நிஜ வாழ்வில் சில சோகங்கள் அடங்கியிருக்கிறது.

ராஷ்மிகா மந்தானா எல்லாம் நேர்காணல்களிலும் விழாக்களிலும் பார்ப்பதற்கு ஒரு சிறு குழந்தை போன்ற முக பாவனை உடன் வெகுளித்தனமாக காட்சியளிப்பார். ஆனால் ராஷ்மிகா மந்தானாவிற்கு நடக்க இருந்த திருமணம் சில காரணங்களால் நடக்காமல் நின்று விட்டது. சற்றும் தன் முகத்தில் காட்டாமல் மகிழ்ச்சியான இன்முகத்தோடு இப்பொழுதும் இருப்பார ராஷ்மிகா மந்தான என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்மிகா மந்தானா பாலிவுட் திரைப்படங்களின் நடிப்பது தன்னுடைய கனவு என்றும் சில நேர்காணலில் கூறியிருக்கிறார். தற்பொழுது ராஷ்மிகா மந்தானாவிற்கு பாலிவுட் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ராஷ்மிகா மந்தானா தமது சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது ஒரு படத்திற்கு இரண்டு கோடி ரூபாய் வாங்கும் ராஷ்மிகா தற்போது நாலு கோடி ரூபாய் கேட்பதாக கூறப்படுகிறது இதற்கு தயாரிப்பாளர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர் .இதனால் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயரை ராஸ்மிகா பெற்றுள்ளார்.ராஸ்மிகா சமீபத்தில் நடித்த சீதாராமன் திரைப்படமும் எதிர்பார்த்ததை விட அதிக வசூலை பெற்று வருகிறது. இதனால் ராஷ்மிகா மகிழ்ச்சியில் உள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top