சினிமா

” தளபதியை இயக்க ரெடி”!- ஆர்.ஜே பாலாஜி கொடுத்த அட்டகாசமான அப்டேட் !

வானொலியில் தொகுப்பாளராக இருந்து பின்னர் சினிமாவில் காமெடியனாக அறிமுகம் ஆகி தற்போது கதாநாயகனாக நடித்துக் கொண்டிருப்பவர் ஆர் ஜே பாலாஜி. கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான வீட்ல விசேஷங்க என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றி அடைந்தது . இந்த திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் சத்யராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோரும் நடித்திருந்தனர். மேலும் இந்த திரைப்படத்தை சரவணன் என்பவருடன் இணைந்து ஆர் ஜே பாலாஜி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

அந்த திரைப்படத்தை அடுத்து தற்போது ஆர் ஜே பாலாஜி நடித்துக் கொண்டிருக்கும் படம் ரன் பேபி ரன் . இந்த திரைப்படத்தில் அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், விவேக் பிரசன்னா, ஜோ மல்லூரி, தமிழ், ராதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை மலையாள இயக்குனரான ஜெயன் கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியிருக்கிறார் . இந்தப் படமானது வழக்கமான காமெடி படமாக இல்லாமல் ஒரு ஆக்ஷன் திரில்லர் கதையாக உருவாகி இருக்கிறது .

Advertisement

இந்த திரைப்படமானது வருகின்ற பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் ஆர் ஜே பாலாஜி . இவர் இதற்கு முன் நடித்திருந்த மூன்று திரைப்படங்களிலும் இவரே கதை எழுதி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் வீட்ல விசேஷங்கள் படம் வெளியிட்டின் போது கூட தளபதி விஜய்க்கு ஆன்லைன் ஒன்றை சொல்லி இருப்பதாக கூறியிருந்தார் . தற்போது அந்தப் படத்தினை பற்றிய மேலும் சில விஷயங்களை கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார் ஆர்ஜே.பாலாஜி .

கடந்த வருடம் ஜனவரி 27ஆம் தேதி தளபதியை சந்தித்த ஆர் ஜே பாலாஜி அவரிடம் ஒரு ஒன் லைன் கதையை கூறியிருக்கிறார் . தளபதிக்கும் அந்த கதை பிடித்து விடவே எப்போது படத்தை இயக்கலாம் என கேட்டிருக்கிறார் . மீதமுள்ள கதையை தயார் செய்ய எப்படியும் ஒரு வருடமாகும் என பதில் அளித்திருக்கிறார் ஆர் ஜே பாலாஜி . மேலும் அப்போது தளபதி விஜய் வாரிசு படத்தின் சூட்டிங் கில் ஈடுபட்டிருந்தார் . அதனைத் தொடர்ந்து தனது 67 ஆவது படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் ஒப்பந்தமாகி இருந்தார் . அதனால் ஒரு வருடம் சரியாக இருக்கும் என கூறி இருக்கிறார் ஆர்ஜே.பாலாஜி.

Advertisement

தற்போது வாரிசு திரைப்படம் வெளியாகிவிட்டது அது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து தளபதி 67 படத்தின் சூட்டிங் வேலைகளும் ஆரம்பிக்க இருக்கின்றன . இந்நிலையில் ஆர் ஜே பாலாஜியின் பேட்டியை வைத்து பார்க்கும் போது தளபதி 68 இல் ஆர் ஜே பாலாஜி தான் இயக்குனராக இருப்பார் என்று தெரிகிறது . அந்த சமயத்தில் தளபதி இந்த வருட ஏப்ரல் மாதம் சூட்டிங் போகலாம் என்று கூறி இருக்கிறார் . ஆனால் தற்போது தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு வேலைகள் துவங்க இருப்பதால் இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற விபரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை .

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top