அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95வது ஆஸ்கார் அகாடமி திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் பாடல் ஆன நாட்டு நாட்டு என்ற பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கார் விருந்தினை வென்று இருக்கிறது. இந்தப் பாடல் கோல்டன் குளோப் உறுதியும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஸ்லம் டாக் மில்லினியர் திரைப்படத்திற்கு பிறகு இந்திய சினிமாவைச் சார்ந்த இசையமைப்பாளர் ஒருவர் இரண்டாவது முறையாக ஆஸ்கார் விருதுகளை வென்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
95 ஆவது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்வு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள டோல்பி தியேட்டரில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உட்பட ஏராளமான நடிகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாகவும் விருது வென்றவர்களுக்கு உறுதிகளை வழங்கி கௌரவி போர்களாகவும் இடம் பெற்றனர். மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற 95 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய சினிமாவின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல்களுக்கான பிரிவில் இடம் பெற்றிருந்தது .
ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவின் இறுதிப் பட்டியலில் இடம் பெற்று இருந்தது. இந்தப் பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றிருப்பதால் நிச்சயமாக ஆஸ்கார் விருதுகளை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே நேற்று நடைபெற்ற விழாவில் இந்தப் பாடல் சிறந்த பாடலுக்கான ஒரிஜினல் பிரிவில் ஆஸ்கார் விருதினை வென்று சாதனை படைத்திருக்கிறது. அமெரிக்காவில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் இசையமைப்பாளர் கீரவாணி இந்த விருதினை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமௌலி உட்பட ஆர்.ஆர்.ஆர் திரைப்பட குழுவினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சென்ற ஆண்டு தெலுங்கு உட்பட இந்திய பிராந்திய மொழிகளில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பான் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் சென்ற ஆண்டின் மிகப்பெரிய வெற்றி திரைப்படம் ஆக அமைந்தது. இந்தத் திரைப்படத்தின் வெற்றியின் மூலம் இந்திய சினிமா உலக அளவில் புகழ்பெற்றது என்றால் அது மிகையாகாது. இந்தத் திரைப்படத்தில் ராம்சரண் ஜூனியர் என்டிஆர் அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா பட் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படத்தில் இடம் பெற்று இருந்த ஜெய் ஹோ என்ற பாடல் 2009 ஆம் ஆண்டு ஆஸ்கார் ஒரு தெய்வம் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது அதன் பிறகு 14 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு இந்திய இசையமைப்பாளர் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதினை வேண்டி இருக்கிறார். நேற்று நடைபெற்ற விழாவில் இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்திய சினிமா நட்சத்திரங்களும் இந்திய சினிமா ரசிகர்களும் இந்த விருதினை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். ஆர்.ஆர் .ஆர் திரைப்படம் தவிர ஆவணத் திரைப்படம் ஆன எலிபன்ட் விஸ்பர்ஸ் என்ற திரைப்படமும் சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கார் விருதினை வேண்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
The team supporting #RRR goes wild as “Naatu Naatu” wins best song at the #Oscars pic.twitter.com/mgiNfkj8db
— The Hollywood Reporter (@THR) March 13, 2023