மாமனிதர்கள், பிரபலங்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாகவோ அல்ல படமாகவவோ இயக்கி வெளியிடுவர். தற்போது கூட கோலிவுட்டில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு ஷூட்டிங்கில் உள்ளது. இப்பட்டியலில் மற்ற இரு சம்பந்தமில்லாத படங்கள் இணைகிறது.
முதலில் தமிழக பா.ஜா.கா தலைவர் அண்ணாமலையின் வாழ்கையில் நடிகர் விஷால் நடிக்கவுள்ளதாக சில வாரங்கள் முன்பு தகவல்கள் வெளியாகின. அண்ணாமலையின் ஐ.பி.எஸ், அரசியல் நிகழ்வுகளைக் கொண்ட படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இதில் விஷால் நடிப்பதற்கு முக்கியக் காரணம், அவர் பா.ஜா.காவில் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளதென்பதால் தான்.
மற்றொரு படம் இன்னும் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. நடப்பு பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்கை வரலாற்றியல் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக இன்று தகவல்கள் பரயியுள்ளன. இதற்கு ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு. வடக்கில் எந்த அளவிற்கு பா.ஜா.காவை ஆதரிக்கின்றனரோ அதை விட அதிகமாக தமிழக மக்கள் எதிர்க்கின்றனர். தலைகீழாக நின்றாலும் எந்த ஜென்மத்திலும் தமிழக மக்களை வென்றுவிட மோடியால் முடியாது என்று ராகுல் காந்தியே கூறியுள்ளார்.
நடிகர் சத்யராஜ் நல்ல கொள்கைகளைக் கொண்டவர். 2007ஆம் ஆண்டு பெரியாரின் வாழ்கை வரலாற்றில் நடித்தவர். மேலும் மோடியை எதிர்க்கும் நபர்களில் இவரும் ஒருவர். இத்தகு நிலையில் சத்யராஜ் எப்படி இதற்கு சம்மதித்து இருப்பார் ? என்ற கேள்விகள் ஒரு பக்கம் எழும்ப அவர் இதற்கு பதில் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, ” என்னிடம் இப்படி ஒரு படம் செய்யலாம் என யாரும் வரவில்லை. எனக்கே இந்தச் செய்தி புதிதாக இருக்கிறது. இப்போதைக்கு இப்படி எதுவும் இல்லை, பின்னர் பார்க்கலாம். ” என்றார். இப்படி செய்தி வந்ததே சத்யராஜ் அவர்களுக்கு ஒரு சிறிய அசிங்கமாக இருக்கும். அதனால் இப்போதைக்கு அவர் மோடியின் வாழ்கை வரலாற்றில் நடிப்பது பொய் எனவேக் கருதலாம்.