சினிமா

தந்தை மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ள ஷாருக்கான் – அட்லி இயக்கத்தில் வெளிய வர உள்ள ஜவான் படம் குறித்து கசிந்த ரகசிய அப்டேட்கள்

விஜயுடன் தெறி மெர்சல் மற்றும் பிகில் என மூன்று வெற்றித் திரைப்படங்களை கொடுத்த பின்னர் தற்பொழுது இயக்குனர் அட்லி பாலிவுட் பக்கம் திரும்பி விட்டார். ஷாருக் கானை வைத்து அவர் ஜவான் திரைப்படத்தை கூடிய விரைவில் இயக்க உள்ளார். தற்பொழுது பதான் படத்தில் நடித்து வரும் ஷாருக்கான் கூடிய விரைவில் அட்லி இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஷாருக்கான் தயாரிப்பில் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில் நயன்தாரா ப்ரியாமணி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் இத் திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றனர். சமீபத்தில் இத்திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது. மிகப்பெரிய ஆக்சன் படமாக திரைப்படம் வெளிவர இருக்கிறது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளிவர உள்ளதாக தகவல் கசிந்ததும் குறிப்பிடத்தக்கது.

மிகப் பெரிய ஸ்டார் பட்டாளமே களமிறங்க போகின்றனர்

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இத்திரைப்படத்தில் ஷாருக்கான் தந்தை மகன் என இரு வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தந்தை ஷாருக்கானுக்கு தீபிகா படுகோன் ஹீரோயின் என்றும் ஷாருக்கானுக்கு நயன்தாரா ஹீரோயின் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் பாகுபலி திரைப்படத்தில் நடித்த ராணா டகுபதி இத்திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல் கசிந்துள்ளது.

இவையெல்லாம் போக தளபதி விஜய் திரைப்படத்தில் சிறப்பு கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாகவும் கூடுதல் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. சுமார் இருநூறு கோடி ரூபாயில் இத்திரைப்படம் படமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தில் சன்யா மல்ஹோத்ரா பிரியாமணி யோகி பாபு சுனில் குரோவர் என மிகப் பெரிய ஸ்டார் பட்டாளமே களம் இறங்கப் போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஷாருக்கான் நடிப்பில் படம் திரைப்படம் வெளிவர, ஜவான் திரைப்படம் ஜூன் மாதத்தில் வெளிவரும் என்று நமக்குத் தெரிய வந்துள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் டங்கி திரைப்படம் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு மிகப் பெரிய மூன்று படங்கள் ஷாருக்கான் நடிப்பில் வெளிவர உள்ளதால் ஷாருக்கான் ரசிகர்கள் தற்பொழுது வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்த ஆண்டு மிகப் பெரிய கம்பேக்கை ஷாருக்கான் கொடுக்கப்போகிறார் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

TOP STORIES

To Top