தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யை வைத்து இயக்கிய இயக்குனர்கள் அடுத்தடுத்து மேல் இடங்களுக்கு சென்று கொண்டுள்ளனர். தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று வெற்றிப் படங்களைத் தந்த அட்லீ, பாலிவுட்டுக்கு சென்று ஷாரூக் கனை வைத்து ‘ ஜவான் ’ எனும் படத்தை இயக்கி 1000 கோடிகள் வசூல் சாதனை படைத்தார்.
அட்லீ சென்ற அதே பாதையில் விஜய்யின் மற்றொரு விருப்பமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செல்லவுள்ளார். பாலிவுட் பாட்ஷா ஷாரூக் கானுடன் இணைந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் ஓர் தரமான ஆக்க்ஷன் திரைப்படம் செய்யவுள்ளார். இந்தப் படத்தைச் செய்ய நடிகர் ஷாரூக் கான் தீவிரமாக உள்ளார்.
படத்தின் பெயர் ‘ பேந்தர் ’ என இணையத்தில் வைரலாகி உள்ளது. பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருக்கிறது. 90% இப்படம் நடப்பது உறுதியாகிவிடும். நடிகர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் போதே இந்தியா முழுவதும் பிரபலமானார். பல்வேறு மொழி நடிகர்கள் இவருடன் இணைந்து பணிபுரிய ஆசையாக உள்ளனர்.
கடைசியாக விஜய்யை வைத்து எடுத்த லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக சற்று அடி வாங்கியது. தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் படம் செய்யவதற்கான ஸ்கிரிப்ட் பணியில் கவனம் செலுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் அப்படம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குக் ரஜினியும் வேட்டையன் படத்தை முடித்துவிடுவார்.
ரஜினி படத்தை நிறைவு செய்துவிட்டு லோகேஷ் கனகராஜ் கார்த்தியை வைத்து கைதி – 2 படத்தை தொடர்வார் என சில மாதங்கள் முன்பு கார்த்தியே மேடை நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்தார். ஆனால் தற்போது இந்த ஷாரூக் கான் – லோகேஷ் கனகராஜ் படத்தின் பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருப்பதால் எல்.சி.யூ படங்கள் தள்ளிப் போகும்.
தரமான கம்பேக் கொடுத்துள்ள ஷாரூக் காணும் அதிரடியான ஆக்க்ஷன் படங்கள் எடுக்கும் லோகேஷ் கனகராஜும் இணைவது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வெற்றிப் பெற்றால் 1000 கோடிகளை வசூலிப்பதோடு மேலும் சில சாதனைகளையும் படைக்கும்.