Friday, March 29, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமா"உலக நாயகனுடன் இணையும் சிவா கார்த்திகேயன்" …. விரைவில் தொடங்க இருக்கும் புதிய படத்திற்கான அப்டேட்!

“உலக நாயகனுடன் இணையும் சிவா கார்த்திகேயன்” …. விரைவில் தொடங்க இருக்கும் புதிய படத்திற்கான அப்டேட்!

தமிழ் சினிமாவில் முன்னாடி கதாநாயகராக இருப்பவர் சிவா கார்த்திகேயன். இவர் ஒரு சிறந்த கமர்சியல் ஹீரோவாகவும் வெற்றிப்பட கதாநாயகராகவும் பலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது திரைப்படங்கள் என்றாலே மினிமம் கேரண்டியுடன் வெளியாகும் என்ற நிலைமை தமிழ் சினிமாவில் உருவாக்கி இருக்கிறது. கமர்சியலான திரைப்படங்களின் மூலம் தனக்கென மார்க்கெட் வைத்திருப்பவர். எதிர்நீச்சல் திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் . வருத்தப்படாத வாலிபர் சங்கம் டாக்டர் மற்றும் டான் உட்பட ஏராளமான வெற்றி படங்களை கொடுத்த இவர் தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இந்த மாத இறுதியில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்திற்கான ஓ.டி.டி திரையரங்க உரிமைகள் மற்றும் சேட்டிலைட் உரிமைகள் மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்டு திரைப்படத்திற்கான செலவை படம் வெளியாவதற்கு முன்பே வசூல் செய்து விட்டன. இது எந்த அளவிற்கு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் இருக்கிறது என்பதை காட்டுகிறது . மாவீரன் திரைப்படத்தை தொடர்ந்து அயலான் திரைப்படத்திலும் மற்றும் ஏ ஆர் முருகதாஸின் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் திரைப்படத்தினைப் பற்றிய புதிய அப்டேட் இன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி சோனி பிக்சர்ஸ் மற்றும் ராஜ்கமல் புரொடக்‌ஷன் சார்பாக உலக நாயகன் கமல்ஹாசனும் மற்றும் மகேந்திரன் என்பவரும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக படப்பிடிப்பு குழு அறிவித்திருக்கிறது. இத்திரைப்படத்தில் சிவா கார்த்திகேயன் உடன் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்தத் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இவர் 2017 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான அரங்கும் திரைப்படத்தை இயக்கியவர் . இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

- Advertisement -

மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸை தொடர்ந்து ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் வருகின்ற மே மாதம் முடிவடையும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் முழுவதுமாக படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்படும் என பட குழு அறிவித்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீரில் படமாக இருப்பதாகவும் படக்குழுவினர் அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளனர். விரைவாக படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதால் அந்த திரைப்படமும் மூன்று மாதங்களுக்குள் ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

- Advertisement -

கடந்த வருடம் வெளியான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை . இதனைத் தொடர்ந்து மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாக இருக்கும் மாவீரன் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் இசையில் அயலான் என்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவா கார்த்திகேயன். மேலும் இவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாசுடன் ஒரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Popular