Friday, December 6, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாசில்லுனு ஒரு காதல் 2 அறிவிப்பு.. சூர்யா, ஜோதிகா இல்லை.. ஆனால் சிறப்பான வேறொரு ஹீரோ...

சில்லுனு ஒரு காதல் 2 அறிவிப்பு.. சூர்யா, ஜோதிகா இல்லை.. ஆனால் சிறப்பான வேறொரு ஹீரோ ஒப்பந்தம்.. !

நடிகர் சூர்யாவின் கேரியரில் ஒரு மிக முக்கியமான படங்களில் ஒன்று சில்லுனு ஒரு காதல். 2006ஆம் ஆண்டு கிருஷ்ணா இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா, வடிவேலு, சந்தானம் உட்பட பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் இது.

- Advertisement -

காலேஜ் நாட்களில் சீனியர் – ஜூனியர் காதலைப் போல அமைய வேண்டும் என இன்றளவும் இளைஞர்களும் ஏங்குங்கின்றனர் என்று சொன்னால் கூட அது மிகையாகாது. அதே சமயம் அக்காதல் சேராத போதும் பிற்காலத்தில் தனக்கு ஏற்ற துணை, குடும்பம் என சரியாக அமையும் எனவும் மறுபக்கம் இப்படம் காட்டும்.

இப்படத்தில் சூர்யா – பூமிகா கல்லூரி காதல், சூர்யா – ஜோதிகா திருமணக் காதல் என அனைத்தையும் ஏ.ஆர்.ரஹ்மான் தன் மென்மையான இசையில் அழகாக ஏற்றிக் காட்டி இருப்பார். குறிப்பாக நியூ யார்க் நகரம், முன்பே வா ஆகிய பாடல்கள் ரஹ்மானின் தரமான தமிழ் பாடல்களில் டாப்பில் இருக்கும்.

- Advertisement -

இத்தகு சிறப்பான படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக்கப்படவுள்ளது. பொதுவாக ஒரு படம் பெரிய வெற்றியைப் பெற்றால் அதன் இரண்டாம் பாகத்தை வைத்து மேலும் லாபத்தை எடுப்பதே பிசினஸ். ஆனால் அப்படி இரண்டாம் பாகம் எடுக்கும் படங்களில் ஒரு சிறியவை மட்டுமே வெற்றியைக் கண்டுள்ளது என்பது வேறு விஷயம்.

- Advertisement -

சில்லுனு ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகத்தையும் கிருஷ்ணாவே இயக்குகிறார். படத்தின் நாயகனாக கவின் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அடுத்த தலைமுறையின் பெரிய ஹீரோவாக நடிகர் கவின் இருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. டாடா, ஸ்டார் ஆகிய படங்களில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் மழைப் போல பொழிந்தன.

அவரை வைத்து 2ஆம் பாகத்தை தொடர்வது என்பது சரியான முடிவு. கவினுக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்பது பற்றி எந்த விதத் தகவலும் இல்லை. முதல் பாகத்தில் பயன்படுத்திய இசைகளை மீண்டும் பயன்படுத்தும் தேவை இருப்பதால் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானே தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவின் அடுத்தடுத்து 3 படங்கள் ஒப்பந்தம் ஆகியுள்ளதால் சில்லுனு ஒரு காதல் 2 ஷூட்டிங் நடந்து வெளியாக எப்படியும் 2/3 ஆண்டுகள் ஆகும் போல. பார்க்கலாம்.

Most Popular