Sunday, April 28, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயனுக்கு கன்டிஷன் போட்டுள்ள முருகதாஸ்.. வேறு வழி இல்லாமல் நடித்து வரும் சிவகார்த்திகேயன்.. !

சிவகார்த்திகேயனுக்கு கன்டிஷன் போட்டுள்ள முருகதாஸ்.. வேறு வழி இல்லாமல் நடித்து வரும் சிவகார்த்திகேயன்.. !

சிவகார்த்திகேயன் நடப்பு கோலிவுட்டில் மிகவும் பிஸியாகவும் அதிவேகமாக உச்சத்திற்கு செல்லும் பாதையில் உள்ளார். அடுத்த தலைமுறையின் ப ரிய ஹீரோவாக உருவெடுக்க அனைத்துத் திறனையும் ரசிகர்களையும் தன் வசம் வைத்துள்ளார்.

- Advertisement -

சிவகார்த்திகேயன் வழக்கமான ஸ்கிரிப்ட்களில் இருந்து அடுத்தக்கட்டதுக்கு நகர்ந்துள்ளார். கடைசியாக வெளியான மாவீரன் புதிய கமர்ஷியல் அனுபவத்தை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து அமரன் எனும் பெரிய பிராஜக்ட்டில் கமிட் ஆகியுள்ளார். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுடன் இணைந்து மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார்.

அண்மையில் சிவகார்த்திகேயன், இயக்குனர் முருகதாஸ் தலைமையில் நடித்து வருகிறார். அப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் புதுச்சேரியில் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் கதாநாயகனாக வரும் சிவகார்த்திகேயனுக்கு முருகதாஸ் ஒரு பெரிய கண்டிசன் போட்டுள்ளார். அதனை மீறாமல் சிவகார்த்திகேயனும் ஒத்துழைப்பு தந்துக் கொண்டுள்ளார்.

- Advertisement -

அதாவது முருகதாஸ் அவர்களுடன் செய்யும் படத்தின் போது இடையில் ஒரு 20 நாட்கள், அமரன் படத்திற்கு கால்ஷீட் தரலாம் என சிவகார்த்திகேயன் நினைத்துள்ளார். ராஜ் கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், மேஜர் முகுந்தன் வரதராஜனின் சுயசரிதையை காட்டுவது தான் அமரன் திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் இப்படம் இன்னுமும் ஷூட்டிங்கில் தான் உள்ளது.

- Advertisement -

முருகதாஸ் படத்தில் இருந்து சில நாட்கள் விடுவித்துக் கொண்டு அங்கு செல்லலாம் என எண்ணிய சிவகார்த்திகேயனை முருகதாஸ் அனுப்பவில்லை. ஏனென்றால், ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக சல்மான் கானுடன் ஹிந்தி படத்தில் பணியாற்றவுள்ளார். அப்படம் 5 ஆண்டுகளாக இழுத்து தற்போது தான் ஒப்பந்தம் ஆகியுள்ளது.

சல்மான் கான் படத்தின் பணிகள் ஜூன் மாதம் துவங்க வேண்டிய கட்டாயத்தில், சிவகார்த்திகேயனிடம் முருகதாஸ் இப்படத்தை முழுமையாக முடித்து விட்டு சென்றான் உதவியாக இருக்கும் எனக் கேட்க அதற்க்கு அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். ஒரே இழுப்பில் படத்தை 4 மாதங்களில் முடிந்துவிடும் என்பதால் சிவகார்த்திகேயனும் தொடர்ந்து நடித்துக் கொண்டுள்ளார்.

Most Popular