Friday, September 13, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாகவினின் ஸ்டார் படத்தில் சிவகார்த்திகேயன்.. அவர் நடிக்க காரணம் இது தான்.. ஆர்வத்தை அதிகரிக்கும் ஸ்டார்.....

கவினின் ஸ்டார் படத்தில் சிவகார்த்திகேயன்.. அவர் நடிக்க காரணம் இது தான்.. ஆர்வத்தை அதிகரிக்கும் ஸ்டார்.. !

தமிழ் சினிமாவின் வறட்சியைப் போக்க அடுத்தடுத்து பெரிய படங்கள் தொடர்ச்சியாக வரவிருக்கின்றது. அதில் இன்னும் இரு தினங்களில் வெளியாகவுள்ள திரைப்படம் ஸ்டார். வளர்ந்து வரும் நடிகரான கவின் இன்னும் ஓரிரு படங்களில் பெரிய இடத்தைப் பிடித்து விடுவார் போன்ற அளவுக்கு அவரின் நடிப்பும் படங்களும் அமைந்துள்ளன.

- Advertisement -

பியார் பிரேம காதல் படத்தின் இயக்குனரான இளனின் இரண்டாவது படம் தான் ஸ்டார். தன் முதல் படத்தின் ஹீரோவாக நடித்த ஹரிஷ் கல்யாண் தான் இதிலும் நாயகனாக நடிக்கவிருந்தது. ஆனால் அவர் அதில் இருந்து விலக கவின் உள்ளே வந்தார். கதாநாயகனாக வரும் கவின், சினிமாவில் எப்படி ஒரு தட்டித் தடுமாறி ஹீரோவாக முன் வருகிறான் என்பது தான் கதைக்களம்.

அண்மையில் வெளியான டிரெய்லர் & யுவனின் பாடல்கள் அனைவர் மத்தியிலும் சிறப்பான வரவேற்பைப் பெற்று படத்தின் எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது. படக்குழு இந்தப் படத்தின் மீது பெரிய நம்பிக்கை வைத்துள்ளது. 2024இல் கோலிவுட்டின் முதல் பெரிய வசூலை ஈட்டும் படமாக இது அமையும் என்று எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

இதனிடையே இப்படத்திற்கு மேலும் சிறிய ஹைப் ஊட்டும் வகையில் ஓர் செய்து வெளியாகியுள்ளது. கவினைப் போலவே வளர்ந்து வரும் நடிகனாக இருந்து இன்று பெரிய இடத்தில் அமர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயன் அவர்கள் ஸ்டார் படத்தில் ஓர் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் இது இன்னும் அதிகாரபூர்வமாக உறுதி அளிக்கப்படவில்லை.

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் முதலில் விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி மெல்ல மெல்ல சினிமாவில் சிறிய கதாபாத்திரங்கள் செய்து கஷ்டப்பட்டு ஹீரோவாக உயர்ந்தார் என்பது அனைவர் அறிந்த ஒன்று. என்னதான் பெரிய இடத்தில் இருந்தாலும் விஜய் டிவியுடனான பந்தம் இன்னும் சிவகார்த்திகேயனுக்கு இருக்கிறது. அதே விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோ மூலம் சினிமாவில் நடிகனாக அறிமுகமானவருக்கு எஸ்.கே உதவுவார்.

சினிமா சம்மந்தப்பட்ட படம் என்பதால் சிவகார்த்திகேயன் சிறிய நேரம் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும் ஸ்டார் படம் நிச்சயம் அதனைத் தக்க வைக்கும் என நம்பலாம்.

Most Popular