Monday, October 7, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஇது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தளபதி விஜய்யுடன் கோட் படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன்.. இந்தக் காட்சியில்...

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தளபதி விஜய்யுடன் கோட் படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன்.. இந்தக் காட்சியில் தான் வருகிறார்.. !

தளபதி விஜய் – வெங்கட் பிரபு காம்போவில் உருவாகி வரும் கோட் திரைப்படம் இறுதிக் கட்ட ஷூட்டிங்கில் உள்ளது. இன்னும் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்குள் மொத்த ஷூட்டிங்கும் நிறைவு பெற இருக்கிறது. அதன் பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் & புரொமோஷன் பணிகள் என மூன்று மாதங்கள் போக செப்டம்பர் 5ஆம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ளது.

- Advertisement -

இந்தப் படத்தில் எப்போதும் காணாத விஜய்யைக் காட்டுவதாக வெங்கட் பிரபு உறுதியளித்துள்ளார். அதற்கேற்றவாறு விஜய்யின் லுக்கும் வெளியாகியுள்ளது. சயின்ஸ் ஃபிக்ஷன் வகையில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறுகிறார்கள், விஜய்யின் கேரியரில் இது போன்ற படம் இதுவே முதல் முறை. எப்படியாவது இந்தப் படத்தை ஹிட்டாக்கும் தீர்மானத்தில் இருக்கிறார்கள்.

அண்மையில் இப்படத்தில் விஜய்யுடன் மற்றொரு பெரிய நடிகர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை, சிவகார்த்திகேயன் தான். மிகவும் பிஸியாக இரு படங்களில் மாறி மாறி நடிக்கும் சிவகார்த்திகேயன் எப்படி இதிலும் நடிப்பார் என்ற கேள்வியில் இச்செய்தியை நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இது தான் உண்மை. டிரைலரில் கூட இவர்களின் காட்சிகளைக் காட்டாமல் நேரடியாக படத்தில் காண்பிக்க படக்குழு திட்டம்.

- Advertisement -

ஏற்கனவே விஜய் – சிவகார்த்திகேயன் காட்சிகளை ஷூட் செய்துவிட்டனராம். இருவரும் சிறிது நேரம் உரையாடும் போல காட்சிகள் அமைந்துள்ளது எனத் தகவல்கள் வந்துள்ளது. சிவகார்த்திகேயன் கோட் படத்தில் நடித்திருப்பது படத்தின் எதிர்பார்ப்பை உயர்த்தும். இது தவிர இரு பெரிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களும் படத்தில் நடித்துள்ளனர். பெரிய சம்பவத்தை வெங்கட் பிரபு செய்வார் என நம்பலாம்.

- Advertisement -

நேற்று கவினின் ஸ்டார் படத்தில் சிவகார்த்திகேயன் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வந்தன. இன்று தளபதி விஜய்யும் கோட் படத்தில் அவர் நடித்திருப்பதாக கூறுகிறார்கள். தன் பக்கம் இரண்டு பெரிய படங்களில் ஓயாமல் நடித்துக் கொண்டே இது போல இயக்குனர்கள் அழைப்புக்கு மரியாதைக் கொடுத்து மற்ற படங்களிலும் சிறிய கதாபாத்திரம் செய்யும் சிவகார்த்திகேயனுக்கு பெரிய மனசு தான்.

Most Popular