சினிமா

மீண்டும் விஜய் டிவியிலிருந்து உருவாகும் ஒரு நட்சத்திரம்.. சிவகார்த்திகேயன் கொடுத்த வாய்ப்பு

தமிழில் பொழுதுபோக்கிற்காக பல டிவி சேனல்கள் உள்ளது. இதில் முதன்மையானது விஜய் டிவி. ஏனெனில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற காமெடி ஷோ, சூப்பர் சிங்கர்,குக் வித் கோமாளி, அது இது எது ,பிக் பாஸ் போன்ற ரியாலிட்டி சோக்களில் தொகுப்பாளராக கண்டஸ்டென்டுகளாக ஸ்கிரிப் ரைடர்களாக இருந்து தற்பொழுது சினிமா துறையில் வாய்ப்பு கிடைத்து தற்பொழுது பல பேர் முதன்மையான இடத்தில் இருக்கிறார்கள்.

Advertisement

தமிழ் சினிமாவில் தற்பொழுது முன்னணி நடிகர்களாகவும் இயக்குனர்கள் ஆகவும் வளம் வருபவர்கள் தன்னுடைய முதல் பயணத்தை விஜய் டிவியிலிருந்து துவங்கியவர்களாக இருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அது இது என்ற ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தற்பொழுது டாக்டர் , டான் போன்ற பல படங்களில் நடித்து 100 கோடி வசூலைத் தொட்டு முன்னணி நடிகர்கள் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார்.

இதேபோல் கோலமாவு கோகிலாவின் மூலம் தமிழ் சினிமாவிற்கு பிரபலமாகி பீஸ்ட், டாக்டர் தற்பொழுது ஜெயிலர் என்று முன்னணி நடிகை நடிகர்களை வைத்து பல வெற்றிப் படங்களை உருவாக்கி வரும் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான நெல்சன் முதன் முதலில் விஜய் டிவியில் ஸ்கிரிப்ட் ரைட்டர் ஆக பணிபுரிந்தார். இவர்களைத் தொடர்ந்து தற்பொழுது சூப்பர் சிங்கரில் கண்டஸ்டெண்டாக இருந்து குக் வித் கோமாளியில் பிரபலமான கோமாளியாக இருந்து தற்பொழுது பின்னணி பாடகியாகவும் அதன்பின் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாகவும் நடித்து பிரபலமாகி வருகிறார் சிவாங்கி. காமெடியா ஆக்டர்களின் முன்னணி நடிகரான நடிகர் சந்தானம் கூட ஆரம்ப காலத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் லொள்ளு சபா என்ற காமெடி ஷோ வின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான். மேலும் இதுபோல குக் வித் கோமாளியில் சிறந்த கோமாளியாக இருந்து மக்களை மகிழ்வித்த புகழ் தற்பொழுது பல படங்களில் நடித்து வருகிறார் குறுகிய காலத்தில் இவரும் ஒரு முன்னணி காமெடி ஆக்டராக வருவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

அண்மையில் கூட சூப்பர் சிங்கர் ஜூனியரின் மூலம் விஜய் டிவியில் அறிமுகமாகி பின் பிக் பாஸ் கண்டஸ்டண்டாக இருந்த ஆஜித் தற்பொழுது தனுஷ் நடித்திருக்கும் நானே வருவேன் திரைப்படத்தில் நடிப்பதாக தன்னுடைய இன்ஸ்டா பேஜில் ஆஜித் நானே வருவேன் திரைப்படத்தின் இயக்குனராகிய செல்வராக அவனோடு இணைந்திருக்கும் ஒரு புகைப்படத்தோடு இந்த செய்தியை வெளியிட்டு இருந்தார்.

தற்போது இவர்களைத் தொடர்ந்து தற்பொழுது கலக்கப்போவது யாரு சீசன் 8-ல் கண்டஸ்டண்டாக மோனிஷா லட்சுமி தற்பொழுது சினிமாவில் கால் எடுத்து வைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் யூடியூபில் நிறைய ஷார்ட் பிலிம் களும் நடித்திருக்கிறார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் அதிதி சங்கர், யோகி பாபு போன்ற நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள்.

இவர்களோடு சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக விஜய் டிவியின் பிரபலம் மோனிஷா பிளசி நடிக்க இருப்பதாகவும் இதன் மூலம் முதன்முதலில் சினிமா உலகிற்கு கால் எடுத்து வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மாவீரன் திரைப்படத்திற்கான பூஜை செய்து சூட்டிங் தொடங்கியதாகவும் அதன் பின் சில காரணங்களால் தற்காலிகமாக சூட்டிங் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றது. ஆனால் ஷூட்டிங் தடை செய்யப்பட்டது அதிகாரப்பூர்வமான செய்தி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top