Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாநானும் அவரும் ஹீரோவாக ஒன்றாக நடிக்க ரெடி.. மீதி இயக்குனர்கள் கையில் தான் உள்ளது.. தன்...

நானும் அவரும் ஹீரோவாக ஒன்றாக நடிக்க ரெடி.. மீதி இயக்குனர்கள் கையில் தான் உள்ளது.. தன் விருப்பத்தை கூறியுள்ள சிவகார்த்திகேயன்.. !

அண்மையில் பிகைன்ட்வுட்ஸ் நடத்திய 2023 வாழ்தரங்கம் நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அங்கு வந்திருந்த சிவகார்த்திகேயன், ஒரு நடிகரைக் குறிப்பிட்டு அவருடன் நடிக்கத் தயாராக இருப்பதாகவும் மீதம் இயக்குனர்கள் கையில் தான் உள்ளது எனவும் கூறியுள்ளார்.

- Advertisement -

இது சமூக வலைதளத்தில் வைரலாக உள்ளது. சிவகார்த்திகேயன் சொன்ன அந்த நடிகர் வேறு யாரும் இல்லை, தெலுங்கு நடிகர் நானி தான். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது பல ரசிகர்களின் கனவு. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து இருவரும் பேசியுள்ளனர். குறிப்பாக நானியை விலன் கதாபாத்திரத்தில் காண வேண்டும் என பெரிய ஆசை.

நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கூறியதாவது, “ நான் ஹீரோவாக அவர் வில்லனாக நடிப்பதை விட இருவரும் ஹீரோவாக நடித்தால் இன்னும் சூப்பராக இருக்கும். மீதி இயக்குனர்கள் கையில் தான் உள்ளது. ” என தன் விருப்பத்தை தெரிவித்தார். இதே போல ஒரு முறை நடிகர் நானியும் கூறியுள்ளார்.

- Advertisement -

ஷ்யாம் சிங்கா ராய் படத்தின் புரொமோஷனின் போது, சமூக வலைத்தளத்தில் சிவகார்த்திகேயன் அவர்களுடன் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு நானி, “ அவருடன் இணைந்து நடிக்க எனக்கு முழு சம்மதம் தான். ” எனக் கூறினார். இருவரும் ரெடியாக இருக்கிறார்கள், எதேனும் இயக்குனர்கள் அவர்களுக்கு ஏற்ப ஸ்கிரிப்ட் ரெடி செய்தால் தரமான காம்போவை நாம் திரையில் காணலாம்.

- Advertisement -

சிவகார்த்திகேயன் மற்றும் நானி இருவரும் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் அவர்களது உழைப்பால் மேலே வந்தவர்கள். இன்று பெரிய நடிகர்களாக வலம் வருகிறார்கள். இருவருக்கும் இந்த ஒற்றுமை உள்ளது. சிவகார்த்திகேயன் மாவீரன், அமரன் என அடுத்தடுத்து தரமான படங்களாக செய்து வருகிறார். மறுபக்கம் நானியும் நல்ல லைன் அப் வைத்துள்ளார். இப்போது இல்லை என்றாலும் வரும் காலங்களில் இவர்கள் இணைந்து நடித்தால் சிறப்பாக இருக்கும்.

Most Popular