நடிகர் சிவகார்த்திகேயன் நடப்பு கோலிவுட்டில் விஜய், அஜித், ரஜினி ஆகியோருக்கு இணையாக படங்கள் நடித்து வசூலிலும் தன் தரத்தை வெளிக்காட்டுகிறார். விஜய் டிவி நிகழ்ச்சிகளில் துவங்கி சிறு சிறு கதாபாத்திரங்கள் செய்து பின்னர் தமிழ் சினிமாவில் நாயகனாக தனக்கென்று ஓர் அங்கத்தைப் பெற்றுள்ளார் சிவகார்த்திகேயன்.
விரைவில் சிவகார்த்திகேயன் தனது கேரியரில் 25வது படம் மைல்கல்லைத் தொடவுள்ளார். அதற்க்கு சில அதிரடி முவுகளை எடுத்துள்ளார். வழக்கமாக ஜாலியான கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் சற்று அதில் இருந்து வெளியே வந்து அடுத்தக் கட்டத்தை எட்டினார்.
தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் எனும் பெரிய படத்தில் நடித்து வருகிறார். மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்கை வரலாறாக அமையும் அப்படன் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. அப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சிவகார்த்திகேயன் மறுபக்கம் முருகதாஸ் அவர்களுட இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
படம் தேர்ந்தெடுப்பது, லுக், வசூல் என நடிப்புத் துறையில் மேலும் பெரிய இடத்திற்கு சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அடுத்ததாக அவர் தனது 25வது படம் குறித்து சில முடிவுகள் எடுத்துள்ளார். அதாவது ஓர் ஆண்டு முன்னர் சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு காம்போ இணைவதாக இணையத்தில் பேசினர்.
அது சிவகார்த்திகேயனின் 25வது படத்துக்கு உறுதியாகியுள்ளது. மைல்கல் படம் என்பதால் மிகுந்த ஆக்க்ஷன்கள் கொண்ட படமாக இது அமைய வேண்டும் என சிவகார்த்திகேயன் தீவிரமாக உள்ளார். பொதுவாக 25வது படம், 50வது படம், 100வது படம் என வரும் போது நடிகர்கள் கூடுதல் கவனத்துடன் படங்கள் தேர்வு செய்வது வழக்கமான ஆசை தான்.
சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு இணைகிறார்கள் எனும் போது பொதுவாக எல்லோரும் ஓர் நல்ல கலகலப்பான படத்தைத் தான் எதிர்பார்ப்பார்கள். காரணம் இருவரும் அதில் கில்லாடிகள். எந்தான் எஸ்.கேவின் 25வது படம் ஆக்க்ஷன் வகையில் உருவானாலும் அதில் வழக்கம் போல அவரது காமெடி குழு உட நடிப்பது கூடுதல் பலம் தான் படத்துக்கு.