Monday, May 6, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாதனுஷ் இயக்கத்தில் நடித்தேன்.. ஆனால்... எஸ்.ஜே. சூர்யா சொன்ன ரகசியம்

தனுஷ் இயக்கத்தில் நடித்தேன்.. ஆனால்… எஸ்.ஜே. சூர்யா சொன்ன ரகசியம்

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்கள் என்ற பட்டியலை நீங்கள் தயார் செய்தீர்கள் என்றால் அதில் நடிக்க தனுஷ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா பெயர் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். இருவருமே தங்களுக்கு கொடுக்கும் கதாபாத்திரங்களும் கட்சிதமாக செய்யக்கூடியவர்கள்.

- Advertisement -

குறிப்பாக நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோர் சைக்கோ கேரக்டர்கள் சிறப்பாக முடிக்க கூடியவர்கள். இந்த நிலையில் நடிகர் தனுஷின் ஐம்பதாவது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

- Advertisement -

இந்தப் படத்தில் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருப்பதாக எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார். நிச்சயம் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் அந்த கதாபாத்திரம் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் தனுசுடன் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்ததாகவும் அந்த படத்தை நடிகர் தனுஷை இயக்கியதாகவும் எஸ் ஜே சூர்யா குறிப்பிட்டுள்ளார். அந்தப் படத்தை தேனாண்டாள் திருமணம் தான் தயாரித்து வந்ததாக எஸ் ஜே சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்திற்காக நடிகர் தனுஷ் கடுமையாக உழைத்து வந்ததாகவும் ஒவ்வொரு காட்சியும் ரசித்து அவர் பணியாற்றியதாகவும் எஸ் ஜே சூர்யா கூறினார். நடிகர் தனுஷ் இயக்கத்தின் நடித்தது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ள நடிகர் எஸ்.ஜே. சூர்யா துரதிர்ஷ்டவசமாக அந்த படம் பாதியை நிறுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அந்த படம் இதுவரை வெளியாக வேண்டும் என்று  சூர்யா வேதனை தெரிவித்துள்ளார். இதனால் நடிகர் தனுஷ் உடன் தான் நடித்த அனுபவம் ஏற்கனவே இருப்பதாகவும் எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார்.

எனினும் தேனாண்டால் நிறுவனம் எடுத்த கதையும் தற்போது நடிகர் தனுஷ் 50 கதையும் வேறு படம் மற்றும் கதை என்றும் அவர் கூறியுள்ளார். இரவாக்காலம் திரைப்படம் கைவிடப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ள எஸ் ஜே சூர்யா அதனை எடுக்க இருப்பதாக கூறியுள்ளார்.

Most Popular