காமெடி நடிகராக அறிமுகமான சூரி கடந்த ஆண்டு ஹீரோவாக முன்னேறி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றார். வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை பாகம் 1 படத்தில் துல்லியமான நடிப்பாற்றலைக் வெளிக்காட்டி அடுத்த நிலைக்கு நகர்ந்தார்.
இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து கொட்டுக்காளி, கருடன், விடுதலை 2 ஆகியப் படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்பட்டியலில் துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் கருடன் எனும் படம் அனைத்துப் பணிகளும் நிறைவேற்றப்பட்டு ரீலீசுக்கு தயாராக உள்ளது. இந்த மாதம் கடைசி நாளான மே 3இல் திரைக்கு வருகிறது.
கருடன் படத்திற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் சூரியின் நெருங்கிய நண்பர்களான சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் கலந்துக் கொண்டனர். இருவருடன் சூரி பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். அதனால் சூரியன் வளர்ச்சியின் துவக்கத்தில் இருவரும் ஒன்றாக வந்து ஆதரிதுள்ளனர்.
நிகழ்ச்சியில் கலகலப்பாக இருக்க சூரியிடம் ” நீங்கள் ஒரு நாள் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி உடம்பில் கூடு விட்டு கூடு பாய்ந்தால் என்ன செய்வீர்கள் ? ” என்ற கேள்வியைக் கேட்டார் தொகுப்பாளர். இதற்கு சூரி நகைச்சுவையாக பதில் கூறினார். அவர், ” சிவகார்த்திகேயன் தம்பி உடம்பில் என்றால் உடனே பத்து தயாரிப்பாளர்களை சந்தித்து தேதிகள் அளித்து அட்வான்ஸ் பணத்தை பேங்கில் போட்டு விடுவேன். ” என்றார்.
பின்னர், “விஜய் சேதுபதி மாமா உடம்பில் இருந்தால் அதே போல அட்வான்ஸ் வாங்கி வைத்துக் கொள்வேன், தமிழில் மட்டுமல்ல ஹிந்தி தயாரிப்பாளர்களிடமும் கூட. அப்படியே ஆமிர் கானைப் பார்த்து வா மாமா என நலம் விசாரித்துவிட்டு வரும் வழியில் ஷாரூக் கான் மச்சனைப் பார்த்துவிட்டு தீபிகா படுகோனேவிடம் 2 நிமிடம் பேசிவிட்டு வருவேன். ” என்றார்.