Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாதளபதி 67 எல்சியூ தான்.. ஆனால் ஒரு டிவிஸ்ட் இருக்கு- எஸ்.ஆர்.பிரபு டிவிட்

தளபதி 67 எல்சியூ தான்.. ஆனால் ஒரு டிவிஸ்ட் இருக்கு- எஸ்.ஆர்.பிரபு டிவிட்

- Advertisement -

தளபதி விஜய் தன்னுடைய 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  நடிக்க உள்ளார். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனர் லலித்குமார் தயாரிக்கிறார். இது தொடர்பாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. படத்தின் டீசர் ஃபர்ஸ்ட் லுக் வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆங்கில படங்களை போல் ஒரே படத்தின் தொடர்ச்சியாக பல படங்களின் கதையை அமைக்கும் வகையில் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருக்கிறார். கைதி, விக்ரம் ஆகிய படங்களில் தொடர்ச்சியாக தளபதி 67 இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட் வந்துள்ளது. கைதி திரைப்படத்தின் தயாரிப்பாளரான எஸ் ஆர் பிரபு வெளியிட்ட ட்விட்டர் பதிவில் Parallel யுனிவர்ஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார் .

- Advertisement -

இதன் மூலம் எல் சி யு யுனிவர்சல் தளபதி 67 தனி கதை களத்தைக் கொண்டு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கைதி, விக்ரம் ,ரோலக்ஸ் போன்ற திரைப்படம் தனி கதை களத்தை கொண்டும் ,தளபதி 67 தனி கதை களமாகவும் உருவாக்கப்படும் என தெரிகிறது. இதன் மூலம் விக்ரம் படத்தில் தோன்றியவர்கள் விஜய் படத்தில் வர மாட்டார்கள். ஆனால் இந்த எல் சி யு யுனிவர்சில் இறுதியில் அனைவரும் இணைந்து அவெஞ்சர்ஸ்  எண்ட் கேம் போல் ஒரு படத்தில் நடிக்கவும் வாய்ப்பு இல்லாமல் இல்லை.

- Advertisement -

ஏற்கனவே விஜய்,அர்ஜுன், விக்ரம் போன்ற நடிகர்கள் தளபதி 67 படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இதனை தனி யுனிவர்சாக லோகேஷ் கனகராஜ் உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது. புதிய யுத்திகளை லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவுக்கு இதன் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெருமளவு அதிகரித்துள்ளது. எனினும் தளபதி 67 விக்ரமைப் போன்று தனி யுனிவர்சாக பிரபலம் அடையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Popular