ஜெய்லர் திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. வசூல் ரீதியாகவும் படு தோல்வி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லால்சலாம் திரைப்படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் . நடிகர் சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஞானவேல் தற்பொழுது சூப்பர் ஸ்டார் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
சந்திரமுகியில் வேட்டைய ராஜாவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ரசிகர்கள் பெரும் அளவில் வரவேர்த்தார்கள். அப்படிப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு வேட்டையன் என்ற பெயர் மிகவும் பொருத்தமாக இருக்கிறது அதில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்றும் பல ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் பேருக்கு ஏற்றது போல் கம்பீர தோற்றுத்துடன் காக்கிச்சட்டை அணிந்து கொண்டு படப்பிடிப்புக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
இத்திரைப்படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் கெட்டப்பில் நடிக்கிறார் என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது .ஆரம்பத்தில் எந்த கெட்டப்பில் அந்த நடிகர்கள் நடிக்கிறார்கள் என்ற விஷயத்தை ரகசியமாக படக்குழுவினர்கள் வைத்திருப்பார்கள். ரசிகர்களை சந்திக்கும் பொழுது மிக சாதாரண முறையில் தான் நடிகர்கள் வருவது வழக்கம் சில நாட்களாக இதை மாறுபட்டு இருக்கிறது.
லியோ திரைப்பட படப்பிடிப்பில் கூட தளபதி விஜய் சஞ்சய் தத்தின் வருகையை வரவேற்கும் காணொளியில் அவர் எந்த கெட்டப்பில்யோவில் நடித்திருக்கிறார் அதே கெட்டப்பில் இருந்தார் .அதை வைத்து ரசிகர்கள் தளபதி விஜயின் கெட்டப்பை புரிந்து கொண்டார்கள் .
அதேபோல் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரம் காவல் அதிகாரி என்பதை தெரியப்படுத்தி ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தி இருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.