Friday, April 26, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாசூர்யா - சுதா கொங்காரா இடையே மோதல்.. புறநானூறு படத்தை கைவிட்டு வேறொரு பெரிய நடிகரிடம்...

சூர்யா – சுதா கொங்காரா இடையே மோதல்.. புறநானூறு படத்தை கைவிட்டு வேறொரு பெரிய நடிகரிடம் சென்றுள்ள சுதா.. !

நடிகர் சூர்யா தன் பட வரிசையில் அடுத்தடுத்து பெரிய இயக்குனர்களுடன் ஒப்பந்தம் செய்தார். ஆனால் ஒவ்வொன்றாக அதெல்லாம் கைவிடப்பட்டே வருகிறது. மேலும் திரையரங்கில் நல்ல சூர்யா படம் வந்தே பல வருடங்கள் ஆகிறது. இதெல்லாம் ரசிகர்களின் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் சம்பாதிக்கிறது.

- Advertisement -

சூர்யா – சுதா கொங்காரா வெற்றிக் கூட்டணியில் சூரரைப் போற்றுத் திரைப்படத்திற்கு பிறகு புறநானூறு எனும் படம் உறுதியானது. பெரிய இயக்குனர் மற்றும் தேசிய விருதுகளை குவிக்கும் அளவு திறன் கொண்டவர் என்பதால் ரசிகர்கள் இப்படத்துக்கு கூடுதலாக எதிர்பார்த்துள்ளனர்.

ஆனால் நேற்று இரவு 11:30 மணிக்கு திடீரென இப்படம், ஸ்கிரிப்ட் பணிகளுக்காக தள்ளி வைக்கபடுவதாக ஒரு அறிக்கையை 2டி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்போதைக்கு தள்ளி மட்டுமே வைக்கப்பட்டுள்ளது, ரத்து ஆகவில்லை என ஒரு பக்கம் நம்பிக்கையாக ulnsr. ஆனால் தகுந்த வட்டாரங்களில் இதற்கு மாறாக சொல்கின்றனர்.

- Advertisement -

அதாவது நடிகர் சூர்யாவுக்கும் இயக்குனர் சுதா கொங்காராவுக்கும் இடையே சில மாதங்களாகவே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. சுதா எழுதிய ஸ்கிரிப்ட்டில் சூர்யா பலவற்றை மாற்றி கேட்க அது சுதா கொங்காராவுக்கு பிடிக்காமல் தான் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது எனச் சொல்கிறார்கள்.

- Advertisement -

அதனால் படத்தையேக் கைவிடத் தான் போகிறார்கள் எனப் பேசுகிறார்கள். சுதாவும் சூர்யாவின் குடும்பமும் பல வருடங்களாக நெருக்கமானவர்கள், ஆனால் இந்தச் சூழல் அதனை உடைந்துள்ளது. இந்தக் கதையை அப்படியே நடிகர் சிம்புவை வைத்து சுதா தொடரவுள்ளாராம்.

சூர்யா அடுத்ததாக மற்ற படங்களை செய்யவுள்ளார், இயக்குனர் ரவிகுமாருடன் அவர் அடுத்தப் படத்தை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் கேரியரில் தொடர்ந்து இது போல பெரிய படங்கள் ஒப்பந்தம் ஆகி பிறகு பல்வேறு காரணங்களால் அவை கைவிடபடுகிறது. சுதாவின் படம் இப்பட்டியலில் மூன்றாவது படம். இதற்கு முன் வெற்றிமாறன் அவர்களுடன் வாடிவாசல் எனும் பெரிய படத்தை அறிவித்தார்.

ஆனால் வெற்றிமாறன் வேறு படங்களில் பிசியாக இருக்க, சூர்யாவுடன் செய்யும் படம் என்ன ஆனது எனக் கூடத் தெரியவில்லை. பிறகு, பாலாவுடன் வணங்கான் எனும் படமும் இதே போல ரத்து ஆனது. அதில் தற்போது அருண் விஜய் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சூர்யாவின் வரிசையில் கங்குவா மட்டுமே இப்போதைக்கு தெளிவாக உள்ளது.

Most Popular