Saturday, April 20, 2024
- Advertisement -
Homeசினிமாபாலிவுட் வெப் சீரிஸில் களம் இறங்கினார் விஜய் சேதுபதி… ! அடுத்த மாதம் வெளியீடு !

பாலிவுட் வெப் சீரிஸில் களம் இறங்கினார் விஜய் சேதுபதி… ! அடுத்த மாதம் வெளியீடு !

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் முதன்மையாக இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தனது எதார்த்தமான நடிப்பாலும்  இயல்பான பாவனைகளாலும் தமிழ் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர்.

- Advertisement -

தமிழ் சினிமா மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு ஹிந்தி என பிற மொழி படங்களிலும் தனது முத்திரையை பதித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் நடித்து மலையாளத்தில் வெளிவந்த ’19(1)(எ)’ படமானது ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தற்போது ஹிந்தியில் பிரபலமான வெப் சீரியஸ் ‘ஃபேமிலி மேன்’. இந்த இணைய தொடர் இரண்டு பாகங்களாக வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது.

- Advertisement -

‘ராஜ் நிடிமோரு’ மற்றும் ‘கிருஷ்ணா டிகே’ ஆகிய இருவரும் இணைந்து புதியதாக இயக்கயிருக்கும் ‘வெப் சீரிஸ்’ தான் ‘ஃபர்சி’. சமீபத்தில் இவர்கள் இயக்கிய ‘கன்ஸ் அன்ட் குலாப்ஸ்’ என்ற காமெடி க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸில் ‘துல்கர் சல்மான்’ நடித்திருந்தார். இந்த வெப் சீரியஸின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் அடுத்த இயக்கம் வெப் சீரிஸ் பார்சி.

- Advertisement -

இந்த வெப் சீரியஸில் பாலிவுட் பிரபல ஸ்டார்  ‘சாகித் கபூர்’ மற்றும் தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் ‘விஜய் சேதுபதி’ மற்றும் நடிகை ‘ராஷி கன்னா’ ஆகியோர் இந்தத் தொடரில் நடித்துள்ளனர். இவர்களுடன்  கேகே மேனன், அன்மோல் பரிக்கர், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் திரில்லர் தொடராக தயாராகிறது. இந்தத் தொடரானது வருகின்ற பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருக்கிறது . இந்தத் திரைப்படத்தின் டீசரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு காத்திருக்க முடியவில்லை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என சாகித் கபூர் பதிவிட்டுள்ளார் .

Most Popular