தமிழ் சினிமாவின் கடந்த கால்நூற்றாண்டுகளாக முன்னனி நடிகராக இருப்பவர் விஜய். சூப்பர் ஸ்டாருக்கு அடுத்து தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரம் இவர்தான். தற்போது இவரது நடிப்பில் உருவாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் வாரிசு. இந்தப் படத்தை தெலுங்கு சினிமாவைச் சார்ந்த வம்சி இயக்கியிருக்கிறார்.
தமிழ் சினிமாவிற்கு சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் எச் வினோத் அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்றாகிய திரைப்படங்கள் மூலம் வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்தவர். இவர் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு என்ற திரைப்படமானது தற்போது விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு போட்டியாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தற்போது இயக்குனர் வினோத் தளபதி விஜய் பற்றி பேசி இருக்கின்றார். அவருக்கு தளபதி விஜய் உடன் படம் இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்திருக்கிறது. இது தொடர்பாக பேசியுள்ள வினோத் தளபதி விஜய்க்காக மட்டும் இதுவரை 25 கதைகளை எழுதியதாக தெரிவித்திருக்கிறார். அவை அனைத்துமே அரசியலுடன் தொடர்புடைய கதைகள்.
2018 ஆம் ஆண்டு தளபதி விஜய் சந்தித்த வினோத் அவரிடம் வலிமை கதையை கூறி இருக்கிறார். ஆனால் அந்தக் கதை தளபதி விஜய் ஈர்க்கவில்லை இதன் காரணமாக அவர் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு மறுத்துவிட்டார். அதன் பிறகு அந்த கதையை அஜித்திடம் கூறிய சம்பந்தமாக இருக்கிறார் வினோத்.
தளபதி விஜய் தனது 63வது படத்தின் கதை விவாதத்தில் இருந்தபோது வலிமை படத்தின் கதையை தளபதியிடம் கூறி அவரிடமிருந்து எப்படியாவது ஒப்புதல் வாங்கி அந்தத் திரைப்படத்தை விஜயை வைத்து எடுக்க முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் வினோத் ஆனால் விஜய்க்கு அனு அந்த கதை பிடிக்காமல் போய்விட்டது. வலிமை படம் தொடர்பாக மூன்று முறை தளபதியை சந்தித்திருக்கிறார் இயக்குனர் வினோத்.
அதன் பிறகு தல அஜித்தை வைத்து அவருக்கு ஏற்றார் போல் கதையை மாற்றி வலிமை படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் வினோத். மேலும் இது பற்றி தொடர்ந்து பேசி அவர் இந்த முறை தளபதிக்கு எனது கதை பிடிக்காமல் போயிருக்கலாம் ஆனால் நிச்சயமாக ஒரு நாள் என்னுடைய கதை அவருக்கு பிடிக்கும் அவரை வைத்து ஒரு படம் இயக்குவதற்கான நேரம் அமையும் என்று கூறினார்.
தளபதி வலிமை படத்தில் நடித்திருந்தால் படம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருக்கும். தளபதி வலிமை படத்தில் இருக்கும் போது தேவையில்லாத பைக் ஸ்டண்ட் காட்சிகள் வைக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்காது.