சினிமா

துணிவு பட வெற்றிக்கு கூட தலைய காட்டாத தல!

தல அஜித் குமார் நடிப்பில் எச் வினோத் அவர்களின் இயக்கத்தில் உருவாகியிருந்த படம் துணிவு இந்தப் படமானது கடந்த பதினொன்றாம் தேதி வெளியானது தளபதி விஜயின் வாரிசு படத்துடன் நேரடி போட்டியாக களமிறங்கியது .

படம் வெளியான நாள் முதலே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது . இந்தப் படத்தில் அஜித்குமார் உடன் மஞ்சு வாரியர் சமுத்திரக்கனி ஜான் கொக்கன் உள்ளிட்ட பணம் முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர் . இந்தப் படத்திற்கு ஜிப்ரான் சேமித்திருந்தார். இந்தப் படத்தை பாலிவுட் தயாரிப்பாளரான மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்திருந்தார்.

Advertisement

எட்டு வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக அஜித் அவர்களின் படம் தளபதி விஜயின் படத்திற்கு நேரடி போட்டியாக களத்தில் இறங்கியது . இரண்டு படங்களும் ரசிகர்களிடம் கடமையான விமர்சனங்களை பெற்றாலும் பொங்கல் பந்தயத்தில் துணிவு படமே முந்தியதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன . சில புள்ளி விவரங்களின்படி வாரிசு மற்றும் துணிவு படங்கள் 200 கோடி கடந்து வசூல் சாதனை புரிகின்றன என்று செய்திகள் வருகின்றன . ஆனால் சில இணையதளங்கள் இதற்கு நேர்மாறான கருத்துக்களை தெரிவிக்கின்றன .

இந்நிலையில் தமிழில் பிரபலமான சினிமா இணையதளம் ஒன்று துணிவு படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் ரசிகர்களை அழைத்து துணிவு படத்தின் வெற்றியை கொண்டாடியது. இந்த நிகழ்வில் படத்தின் இயக்குனர் எச் வினோத் மற்றும் இந்த படத்தில் நடித்திருந்த ஜி எம் சுந்தர்,வீரா, சிபி புவன சந்திரன் மற்றும் பல கலைஞர்கள் இதில் கலந்து கொண்டனர் மேலும் அவர்களுடன் ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று துணிவு படத்தின் வெற்றியை கொண்டாடினர் .

Advertisement

ஆனால் இந்த படத்தின் நாயகன் தல அஜித் குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை . பொதுவாகவே திரைப்படம் சார்ந்த இந்த நிகழ்ச்சிகளிலும் சினிமா நேர்காணல்களிலும் அஜித் குமார் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருவது நாம் அறிந்ததே . இந்நிலையில் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் துணிவு படத்தின் வெற்றி கொண்டாட்டங்களில் இருந்தும் விலகியிருக்கிறார் அஜித். அவர் தன்னுடைய ஏகே 62 படத்தின் வேலைகளில் பிஸியாகி விட்டதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் போய் இருக்கலாம் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top