சினிமா

“தல அஜித் பட நாயகிக்கு ஏற்பட்ட காயம் ” இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்து கொண்ட விபரம் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை கனிகா. இவர் பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஆட்டோகிராப் திரைப்படத்திலும் சேரனுடன் இணைந்து நடித்திருந்தார். தல அஜித் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டிய வரலாறு திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் மிகவும் பரபரப்பாக ரசிகர்களிடம் பெயர் பெற்றது.. இவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் அதிகமாக நடித்து வந்தார். மம்முட்டி மோகன்லால் ஜெயராம் ஆகியவுடன் மலையாள சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் கனிகா.

தற்போது இவர் சின்னத்திரையில் மிகப்பெரிய நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனது திருமணத்திற்குப் பிறகு மலையாள படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த இவர் சில காலம் திரையுலகத்தில் இருந்து ஒதுங்கி இருந்தார் பின்னர் தங்கவேட்டை என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்தார் கனிகா. இவர் திருவிளையாடல் என்ற மெகா சீரியலிலும் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து சன் டிவியில் கோலங்கள் எனும் வெற்றி சீரியலை இயக்கிய திருச்செல்வம் இயக்கத்தில் எதிர்நீச்சல் என்ற தொடரில் தற்போது நடித்து வருகிறார்.

Advertisement

இந்தத் தொடர் 2022 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது. தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களில் டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தை பெற்றிருப்பது இந்த சீரியல் தான். இந்த சீரியலுக்கு என்றே தனி ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் இடம் பெறும் எதிர்மறை கதாபாத்திரமான குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் இயக்குனர் மற்றும் நடிகருமான மாரிமுத்து நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காகவே எதிர்நீச்சல் தொடர் வெற்றி பெற்றிருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது. குணசேகரன் கதாபாத்திரத்தில் மாரிமுத்து அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்திருக்கிறார். ஆணாதிக்கம் பிடித்த மனிதனாக வரும் குணசேகரனுக்கு பயந்து வாழும் ஒடுக்கப்பட்ட மனைவியின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கனிகா.

இந்தத் தொடரில் ஈஸ்வரி குணசேகரனாக அப்பாவி மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கனிகா. தனது கணவனின் அனாதிக்கத்தை பொறுக்க முடியாமலும் அதே நேரத்தில் அவரை எதிர்க்க வேண்டும் என்ற மனநிலையிலும் அமைதியான வித்தியாசமான நடிப்பை இந்த தொடரில் வெளிப்படுத்தி இருக்கிறார் கனிகா இவரது நடிப்பு இந்த தொடரில் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. நல் சினிமாக்களில் எப்பொழுதுமே சிரித்து பார்த்த கனிகா இந்த சீரியல் தொடர்களில் சோகமான முகத்துடன் இருப்பது ரசிகர்களை சோர்வடைய தான் செய்கிறது.

Advertisement

இந்நிலையில் தற்போது கனியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை சோகத்தில் ஆள் திருக்கிறார். அதில் அவரது காலில் மிகப்பெரிய கட்டு போடப்பட்டுள்ளது. ஐந்து வாரம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் அவர். எவ்வாறு விபத்து நடந்தது என்பது குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை. “நானும் இந்த புதிய காலணிகளுடன் நடக்க பழக வேண்டும் . ஒரு வாரத்தை வெற்றிகரமாக கடந்து விட்டேன் இன்னும் நான்கு வாரங்கள் தான் மீதி இருக்கின்றன” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் அவர். ரசிகர்கள் பலரும் அவர் இந்த காயத்திலிருந்து விரைவில் குணம் பெற வேண்டி அவருக்காக வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top