சினிமா

லண்டனில் பிஎம்டபிள்யூ பைக்கில் மாஸாக வலம் வந்து கொண்டிருக்கும் தல அஜித் – ஏகே 61 படம் பற்றிய கூடுதல் விபரம்

சதுரங்கவேட்டை தீரன் அதிகாரம் ஒன்று போன்ற சிறந்த படங்களை இயக்கிய இயக்குனர் ஹச்.வினோத். இவரும் அஜீத் குமாரும் இணைந்து முதலில் நேர்கொண்டபார்வை படத்தில் பணிபுரிந்தனர். பாலிவுட்டில் அமிதாப்பச்சன் மற்றும் டாப்ஸி ஆகியோர் நடிப்பில் வெளியான பின்க் திரைப்படத்தின் ரீமேக்தான் நேர்கொண்ட பார்வை. இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

பின்னர் இருவரும் இணைந்து வலிமை திரைப்படத்தில் பணிபுரிந்தனர். வலிமை திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு பின்பு இந்த ஆண்டு வெளியானது. இந்த ஆண்டு வெளியான வலிமை திரைப்படம் அவ்வளவு சிறப்பாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. ரசிகர்கள் எதிர்பார்த்த படி படம் இல்லை. மற்ற ரசிகர்களும் 50 சதவீதம் மட்டுமே தங்களுக்கு பூர்த்தியானது என்று கூறினர்.

மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து தற்பொழுது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் பணிபுரிந்த வந்து கொண்டிருக்கின்றனர். இத்திரைப்படம் நிச்சயமாக வினோத் ஸ்டைலில் இருக்கும் என்றும் ரசிகர்கள் அனைவரும் வினோத் இடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை நிச்சயம் பூர்த்தி செய்யும் என்று படக்குழு மத்தியில் பேச்சு வந்துள்ளது.

விறுவிறுப்பாக ரிலீசை நோக்கி தயாராகிவரும் ஏகே 61

இத்திரைப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்ட நிலையில் தல அஜித்தின் 61வது படம் என்பதால் ஏ கே 61 என்று ரசிகர்கள் தற்பொழுது கூறி வந்து கொண்டிருக்கின்றனர். இத்திரைப்படத்தில் மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து உள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் இத்திரைப்படத்தின் 80 சதவீத வேலை முடிந்து விட்டது என்றும் மீதமுள்ள வேலைகள் இன்னும் 1-2 மாதங்களில் நடந்து முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. நிச்சயமாக இந்த ஆண்டு தீபாவளி நாளில் இத்திரைப்படம் வெளியாகப் போகிறது என படக்குழு மத்தியில் செய்தி உறுதியாகியுள்ளது.

பிரேக் எடுத்துள்ள அஜித்

இறுதிகட்ட படப்பிடிப்பு க்கு முன்னர் தற்பொழுது ஒரு சிறிய பிரேக் எடுக்கப்பட்டுள்ளது. கிடைத்த பிரேக்கில் ஓய்வு எடுக்காமல் தல அஜித் குமார் லண்டனில் தனது பிஎம்டபிள்யூ பைக்கில் வலம் வந்து கொண்டிருக்கிறார். பொதுவாகவே பைக்கில் பயணம் செய்வது அஜித்குமாருக்கு மிகவும் பிடிக்கும். நாடு கடந்து தற்போது லண்டனில் அவர் பிஎம்டபிள்யூ பைக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top