சினிமா

“சென்னை விமான நிலையத்தில் அஜித்”- ஆரம்பமாகிறதா ஏகே 62?!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகராக இருப்பவர் தல அஜித் குமார். ஜனவரி 11 அன்று  இவரது நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம்  வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

எட்டு வருடங்களுக்குப் பிறகு  தளபதி விஜய்யுடன் நேரடியாக போட்டியில் ஈடுபட்ட அஜித் குமாரின் துணிவு படம் பொங்கல் பந்தயத்தில் முன்னணியில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அஜித் எனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கி விட்டார். இந்தத் திரைப்படத்தில் அஜித் குமாருடன் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருக்கிறார்.

Advertisement

மேலும் அஜித்குமாருக்கு வில்லனாக அரவிந்த் சாமியும்  இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார் இவர்களுடன் சந்தானம் கைதி படத்தில் நடித்த அர்ஜுன் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இப்படத்திற்கான படப்பிடிப்புகள்  விரைவில் தொடங்க இருக்கின்றன என  கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா  ப்ரொடக்ஷன்ஸ் இயக்குகிறது. துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார்  வெளிநாடு சென்றதாக தெரிகிறது.

Advertisement

இன்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை புரிந்தார் தல அஜித். அவரைக் கண்டதும் உற்சாகமான ரசிகர்கள் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அஜித் குமார் விமான நிலையத்திற்கு வந்ததால் சிறிது நேரம் விமான நிலையத்தில் ஆச்சரியமும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சக பயணிகளுடன் வரிசையில் நின்ற அஜித் குமார் வெளிநாடு புறப்பட்டு சென்றார்.

அவர் எந்த நாட்டிற்கு சென்று இருக்கிறார் என்பது போன்ற விவரங்களை வெளியிட விமான நிலைய அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அஜித் குமார் நடிக்கயிருக்கும் ஏகே62  படத்திற்கான வேலைகளுக்காக செல்கிறாரா அல்லது அவர் இதற்கு முன் சென்று வந்த  பைக்கின் மூலம் உலகை சுற்றும் பயணத்தின் ஒரு பகுதியாக செல்கிறாரா என்பது போன்ற தகவல்கள்  தெரியவில்லை.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top