Monday, May 6, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாராணுவ சேவையில் இணைய இருக்கும் தல அஜித்தின் மாணவர்கள்.. இந்திய ராணுவத்துடன் ஒப்பந்தம்.!

ராணுவ சேவையில் இணைய இருக்கும் தல அஜித்தின் மாணவர்கள்.. இந்திய ராணுவத்துடன் ஒப்பந்தம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். கடந்த ஜனவரி மாதம் இவரது நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் நடிக்க இருந்த திரைப்படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டது. மேலும் இந்த திரைப்படத்தினை மகிழ் திருமேனி இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கான படப்பிடிப்புகள் வருகின்ற செப்டம்பர் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

- Advertisement -

பைக்குகள் மற்றும் கார்களின் மீது மிகப்பெரிய ஆர்வம் கொண்ட அஜித் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் பைக் ரேஸ்ராகவும் ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் மீது மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சினிமா நடிகர்களிலேயே விமானம் ஓட்டுவதற்கான பைலட் லைசென்ஸ் பெற்றிருக்கும் ஒரே நடிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது . கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் மீது ஆர்வம் கொண்டிருந்த அஜித் அதனையும் கற்று வந்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு எம்ஐடி கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ட்ரோன் வடிவமைப்பதில் வழிகாட்டியாக அஜித் செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது வழிகாட்டுதல்களின் படி அந்த மாணவர்கள் உருவாக்கிய தக்க்ஷா என்ற ட்ரோன் கொரோனா காலத்தின் போது மீட்டுப் பணிகளில் பெரிதும் உதவியது. இந்த ட்ரோன்களை பயன்படுத்தி தான் கொரோனா காலகட்டத்தின் போது மிகவும் ஆபத்தான பகுதிகளில் சனிடைசர் மற்றும் கிருமி நாசினிகளை தெளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

தற்போது இந்த ட்ரோன்கள் மேலும் ஒரு சாதனையை படைத்திருக்கின்றன. அதன்படி தக்ஷா மாணவர்கள் தயாரித்த இந்த ட்ரோன்களை இந்திய தேசிய ராணுவமும் பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறது. அதற்காக அஜித்திடம் பயிற்சி பெற்ற இந்த மாணவர்களுடன் 165 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது இந்திய ராணுவம். இந்த ஒப்பந்தத்தின்படி 200 ட்ரோன்களை இந்திய ராணுவத்திற்கு அந்த மாணவர்கள் தயாரித்துக் கொடுக்க வேண்டும் . கொரோனா மீட்பு பணிகளில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் தற்போது இந்திய ராணுவத்திற்காகவும் சேவை செய்ய இருக்கின்றன என்பது அஜித்குமார் மற்றும் அவரது மாணவர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரமும் பாராட்டும் ஆகும்.

- Advertisement -

தல அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பல சிக்கல்களையும் தாண்டி அதன் படப்பிடிப்புகள் வருகின்ற செப்டம்பர் மாதம் துவங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே இந்த திரைப்படத்திற்கு பல சிக்கல்கள் நீடித்தன. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து பின்னர் மகிழ் திருமேனி இயக்குனராக அறிவிக்கப்பட்டார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மே மாதம் துவங்குவதாக இருந்தது. ஆனால் அஜித் குமாரின் தந்தை மரணம் அடைந்ததால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அஜித் குமார் தனது பைக் உலக சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு செப்டம்பர் மாதத்தில் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Most Popular