Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமா"சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தால் தல அஜித்திற்கு கிடைத்த வெற்றி" - 27 வருடங்களுக்குப் பின்...

“சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தால் தல அஜித்திற்கு கிடைத்த வெற்றி” – 27 வருடங்களுக்குப் பின் வெளியான செய்தி !

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முடி சூடா மன்னனாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வருடத்திற்கு ஒரு படம் அல்லது இரண்டு படங்களில் மட்டுமே இவர் நடித்து வந்தாலும் அவருடைய நட்சத்திர அந்தஸ்தும் புகழும் ரசிகர்களுக்கு அவர் மேல் இருக்கும் இருப்பும் துளி அளவு கூட குறையவில்லை.. தற்போது சூப்பர் ஸ்டார் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கும் சிலர் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

- Advertisement -

சூப்பர் ஸ்டார் துறை துறைக்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேலானாலும் இப்போது கூட அவரது படங்களின் ரிலீஸ் திருவிழா கோலா பிரதி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது . எத்தனையோ நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர்களுக்கு சூப்பர் ஸ்டாரின் திரைப்படங்கள் லாபத்தை ஈட்டி கொடுத்திருக்கின்றன. வாய்ப்பில்லாமல் கஷ்டப்படும் இயக்குனர்களுக்கு தனது திரைப்படங்களின் மூலம் வெற்றிப்பாதையை உருவாக்கிக் கொடுத்தவர் சூப்பர் ஸ்டார். இத்தகைய சூப்பர் ஸ்டாரின் திரைப்படம் ஒன்று தற்போது தமிழ் சினிமாவில் டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருக்கும் முன்னணி நட்சத்திரத்திற்கு வெற்றிப்பாதையை அமைத்துக் கொடுத்திருக்கிறது .

சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருந்த வரி சிவசக்தி பாண்டியன் . இவர் தயாரிப்பாளராக வருவதற்கு முன்பு திரைப்படங்களை திரையரங்குகளில் விநியோகிக்கும் டிஸ்ட்ரிபியூட்டராக பணியாற்றி வந்தார். அந்தக் காலகட்டத்தில் இயக்குனர் அகத்தியனை வைத்து வான்மதி என்ற திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார் . இப்போது கையில் படம் இல்லாததால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்தது . அந்த நேரத்தில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மீனா ஆகியோரின் நடிப்பில் முத்து திரைப்படம் வெளியானது . இந்தத் திரைப்படத்தை வாங்கி திரையரங்குகளில் விநியோகித்தார் சிவசக்தி பாண்டியன்.

- Advertisement -

முத்து திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது . இதன் காரணமாக விநியோகஸ்தான சிவசக்தி பாண்டியனுக்கும் மிகப்பெரிய தொகை லாபமாக கிடைத்தது. அதில் வந்த லாபத்தை வைத்து வான்மதி திரைப்படத்தை வெற்றிகரமாக தயாரித்து வெளியிட்டார். அந்தத் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் தல அஜித். அந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அஜித்திற்கு அமைந்தது. அந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து அஜித் குமார் அகத்தியன் மற்றும் சிவசக்தி பாண்டியன் கூட்டணியில் காதல் கோட்டை திரைப்படம் வெளியானது . தமிழ் சினிமா வரலாற்றில் காதல் கோட்டை மிகப்பெரிய வெற்றி பெற்று வெள்ளிவிழா கண்ட திரைப்படம் ஆக அமைந்தது.

- Advertisement -

இன்று அஜித் குமார் 100 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் டாப் ஹீரோவாக இருந்தாலும் 27 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கப் போராடிக் கொண்டிருந்தவர். அந்தக் காலகட்டத்தில் இந்த இரண்டு திரைப்படங்களும் அவரது இருப்பை தமிழ் சினிமாவில் உறுதியாக்கின . சூப்பர் ஸ்டாரின் முத்து படத்தின் வெற்றியால் அஜித் குமாரின் இடம் தமிழ் சினிமாவில் உறுதியானது. இந்த தகவல் தற்போது 27 வருடங்களுக்குப் பிறகு வெளியாகி இருக்கிறது.

Most Popular