Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாதுணிவு பொங்கலுக்கு தயாராகும் தல ரசிகர்கள்!-மாஸ் அப்டேட் கொடுத்த போனி கபூர்!

துணிவு பொங்கலுக்கு தயாராகும் தல ரசிகர்கள்!-மாஸ் அப்டேட் கொடுத்த போனி கபூர்!

தமிழ் சினிமாவில் ரஜினி கமலை அடுத்து அதிகப்படியான ரசிகர்கள் மட்டும் போட்டி என்றால் அது விஜய்-அஜித் தான், அதுவும் இவர்கள் இருவரின் திரைப்படங்களும்  ஒரே நாளில் வெளியாகிறது என்றால் ரசிகர்களுக்கு திருவிழா தான். இது போன்ற ஒரு திருவிழா இன்னும் இரண்டு நாட்களில் தமிழகத்தில் நடைபெற இருக்கின்றது .

- Advertisement -

தல அஜித்தின் துணிவு படமும்  தளபதி விஜயின் வாரிசு படமும்  வருகின்ற தைப்பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இதனால் இந்த திரைப்படங்களுக்கான புதிய செய்திகளும் படத்திற்கான ப்ரோமோ நிகழ்ச்சிகளும் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இரண்டு பட நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது படங்களை பற்றிய சுவாரசியமான செய்திகளை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எதிர் செய்து கொண்டிருக்கின்றன .

துணிவு படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை பெற்றிருந்த  சரிகம நிறுவனமானது அந்தப் படத்தின் ப்ரோமோ நிகழ்ச்சிகளை வரலாற்று புகழ்பெற்ற நியூயார்க் நகரத்தின் டைம்ஸ் சதுக்கத்தில்  வைத்து நடத்த இருக்கிறது . முதல் முறையாக ஒரு இந்திய சினிமாவின்  ப்ரோமோ  நிகழ்ச்சியானது டைம் சதுக்கத்தில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஏற்கனவே படத்தின் இயக்குனர் வினோத் அவர்கள் இந்தப் படத்தின் டிரைலரை வைத்து  கதை இப்படித்தான் இருக்கும் என்று யோசிக்க வேண்டாம்  படத்தில் வேற ட்விஸ்ட் வைத்திருக்கிறோம் என்று  பேட்டியளித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டி இருந்தார் .

- Advertisement -

துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியானது  படக்குழுவினருக்கு தலையிடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த படக்குழுவினர் இந்தப் படமானது 2023 ஆம் வருடத்தின்  மிகச்சிறந்த வெற்றி படமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தை கண்டுகளித்த படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர்  மிகவும் திருப்தியில் உள்ளார். படத்தைக் கண்டு வந்த போனி கபூர் மாஸாக தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு  இப்போதுதான் துணிவு பார்த்துவிட்டு வந்தேன் என்று  குறிப்பிட்டுள்ளார் .

அவரது புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது துணிவு படமானது எவ்வளவு மாசாக தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று  யூகிக்க முடிகிறது. இந்தப் படம்  அஜித்தின் மங்காத்தா படம் போல் ஒரு மாஸ் நெகட்டிவ் ஹீரோ ரோலில் தல அஜித்  கலக்கி இருக்கிறார் என்று தெரிகிறது. இந்தப் படமும் மங்காத்தாவை போல தல அஜித்திற்கு ஒரு மிகப்பெரிய ஹிட் ஆக அமையும் என்று  சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Most Popular