Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஓய்வே இல்லை.. தலைவர் ரஜினிகாந்த் 171, 172, 173, 174 என அடுத்தடுத்து 4 படங்களின்...

ஓய்வே இல்லை.. தலைவர் ரஜினிகாந்த் 171, 172, 173, 174 என அடுத்தடுத்து 4 படங்களின் அப்டேட்ஸ்.. வசூல் வேட்டை தான்.. !

” இந்த குதிரை இன்னும் ஒடிக்கிட்டே தான் இருக்கும் ” என்ற வாக்கியத்திற்கு இணங்க சினிமாவில் வலம் வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். 1975 முதல் இன்றளவு வரை சுமார் 50 ஆண்டுகள் சினிமாவில் நாயகனாக அசத்தி வருகிறார். லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் கடைசிப் படத்தை செய்துவிட்டு ஓய்வு பெறவுள்ளதாக வந்த செய்திகள் அனைத்தையும் வதங்தியாக்கியுள்ளார் ரஜினி.

- Advertisement -

தற்போது லைகா நிறுவன தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் எனும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இன்னும் ஓரிரு வாரத்தில் அதனை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ஓர் படம் செய்கிறார். அதற்கான பணிகள் அனைத்தும் துவங்கி சன் பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் ப்ரோமோ ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது.

சில மாதங்கள் முன்பு ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் ஜோடி சேர்ந்த போது பல்வேறு நபர்கள் இது தான் ரஜினியின் கடைசி படன் என்றும் அதனால் தான் லோகேஷ் கனராஜிடம் அவர் சென்றுதுள்ளதாகவும் கூறினர். இயக்குனர் மிஷ்கின் கூட நேர்காணல் ஒன்றில் அது குறித்து சொன்னார். ஆனால் அண்மையில் ஜெயிலர் – 2 குறித்த செய்திகள் அது அனைத்தும் பொய்யாக்கியது.

- Advertisement -

வேட்டையன், லோகேஷ் கனகராஜ் படம் என இந்த இரண்டுப் படங்களுக்குப் பிறகு மாபெரும் வெற்றியடைந்த ஜெயிலர் படத்தின் 2ஆம் பாகத்தில் நடிக்கிறார். இதற்கான பணிகளை ஏற்கனவே இயக்குனர் நெல்சன் துவங்கிவிட்டார். படத்திற்கு ‘ ஹுக்கும் ‘ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஷூட்டிங் துவங்க எப்படியும் அடுத்த ஆண்டு ஆகிவிடும். ஆனால் அதற்குள் மற்றொரு 2 படங்களில் நடிக்க ரஜினி உறுதியளித்துள்ளார்.

- Advertisement -

தலைவர் 171 – லோகேஷ் கனகராஜ், தலைவர் 172 – நெல்சன் ஆகிய படங்களுக்குப் பின் வேல்ஸ் நிறுவன தயாரிப்பாளர் ஐஷாரி கணேஷ் அவர்களுக்கு ஒர் படம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. வெகு ஆண்டுகளாகவே வேல்ஸ் நிறுவனம் ரஜினியையும் கமலையும் சேர்த்து ஓர் படம் செய்ய வேண்டுமென ஆசைப்பட்டது. அது நடப்பது மிகவும் கடினமென்பதால் இப்போதைக்கு ரஜினியை வைத்து ஓர் படம் உறுதி செய்துள்ளனர். இது தலைவர் 173 ஆக இருக்கும்.

இது தவிர்த்து தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் வாரிசு படத்தைத் தயாரித்த தில் ராஜு ரஜினியை வைத்து ஓர் படம் தயாரிக்க வேண்டுமென அவரிடம் பல ஆண்டுகளாக கேட்டு வருகிறார். அதனால் ரஜினி அந்தத் தயாரிப்பு நிறுவனத்துடன் ஓர் படம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இந்த ஒரு தயாரிப்பாளர்கள் படத்திற்கு இயக்குனர்கள் யாரென்று தேர்ந்தெடுக்கப்பட வில்லை. இதன் மூலம் ரஜினியின் மார்கெட் ஏறிக் கொண்டே போவதை மட்டுமே நாம் உணர்கிறோம்.

Most Popular