Tuesday, April 23, 2024
- Advertisement -
Homeசினிமாடாம் க்ரூஸ் அளவுக்கு தளபதி 67 ஆக்க்ஷன் காட்சிகள் இருக்கும் - லோகேஷ் கனகராஜ் உறுதி

டாம் க்ரூஸ் அளவுக்கு தளபதி 67 ஆக்க்ஷன் காட்சிகள் இருக்கும் – லோகேஷ் கனகராஜ் உறுதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ என்றால் அது தளபதி விஜய் தான் . தன்னுடைய துள்ளலான நடிப்பாலும் அட்டகாசமான நடன அசைவுகளாலும் டைமிங் காமெடியாலும் தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களின் நெஞ்சுக்குள் குடியிருக்கும் தளபதி விஜய் . இவர் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் வேலைகள் முடிந்து வரும் பொங்கலுக்கு அந்த படம் வெளியாக உள்ளது .

- Advertisement -

இதனைத் தொடர்ந்து தளபதி 67 படத்திற்கான செய்திகளை அறியும் ஆவலில் உள்ளனர் அவரது ரசிகர்கள் . ஏற்கனவே அந்தப் படமானது லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக முடிவு செய்யப்பட்டது நாம் அறிந்ததே . இவ்வேளையில் அந்தப் படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என்று படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால் அதற்கான எதிர்பார்ப்புகள் இப்பொழுதே அதிகமாகிவிட்டன .

விஜயை வைத்து மாஸ்டர் படம் இயக்கியவர் லோகேஷ் கனகராஜ் . இவர் இயக்கி வெளிவந்த விக்ரம் படம் வெற்றி பெற்றது . இதனை அடுத்து இவர் படங்களுக்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது . இவர் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம் கைதி தளபதி நடித்த மாஸ்டர் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் ஆகிய எல்லா படங்களுமே மாபெரும் வெற்றி என்பதால் தளபதி 67 காண எதிர்பார்ப்பு இப்பொழுதே உச்சத்தில் செல்கிறது .

- Advertisement -

தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் மீண்டும் கூட்டணிகள் இணைந்துள்ளார் தளபதி விஜய் . இந்தப் படமானது ஒரு ஹாலிவுட் ஸ்டைலில் தயாராக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . இதைப் பற்றி கூறிய பெயர் வெளியிட விரும்பாத ஒரு நபர் தளபதி விஜய்க்கு ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸை மிகவும் பிடிக்கும் . அதனால் லோகேஷ் கனகராஜ் டாம் குரூஸின் பாணியில் அவருடைய லோகேஷ் யூனிவர்சலோடு கலந்து ஒரு கதையை தயார் செய்து இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

இந்தப் படமானது டாம் குரூஸ் இன் ஸ்டைலில் ஆக்சன் காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . மேலும் இப்படத்திற்கான காட்சிகள் காஷ்மீர் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்தப் படத்திற்கான ஆக்சன் காட்சிகள் வெளிநாடுகளிலும் படப்பிடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் படம் என்றால் அதில் மெய்சிலிர்க்க வைக்கும் சாகச காட்சிகளுக்கும் அபாயகரமான ஸ்டண்ட் களுக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது . தற்போது தளபதி 67 படம் அது போன்றதொரு ஸ்டைலில் தயாரிக்கப்பட இருப்பதால் தளபதி ரசிகர்களிடம் இந்த படம் மிகவும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது .

மேலும் இந்த படமானது லோகி யூனிவர்சோட கலந்து வந்தாலும் அவரது வழக்கமான ஸ்டைலில் இருந்து சற்று மாறுபட்டு ஃபாஸ்ட் பேஸ்டு திரைக்கதையில் வரவிருப்பதாகவும தெரிகிறது . இந்தப் படமானது 2023 டிசம்பர் அல்லது 2024 பொங்கலுக்கு திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Most Popular