Friday, October 4, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாதுப்பாக்கி படத்தின் நீக்கப்பட்ட காட்சியில் விஜய் செய்துள்ள நகைச்சுவை.. ஏ.ஆர்.முருகதாஸ் இணையத்தில் பகிர்வு.. !

துப்பாக்கி படத்தின் நீக்கப்பட்ட காட்சியில் விஜய் செய்துள்ள நகைச்சுவை.. ஏ.ஆர்.முருகதாஸ் இணையத்தில் பகிர்வு.. !

தளபதி விஜய்யின் கேரியரில் பெரிய பிளாக்பஸ்ட்டராக வந்த படங்களில் ஒன்று துப்பாக்கி. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2012இல் இப்படம் வெளியானது. கத்தி படத்திற்குப் பிறகு விஜய் – முருகதாஸ் கூட்டணியின் தொடர் வெற்றி இத்திரைப்படம்.

- Advertisement -

இராணுவத்தில் இருந்து விடுமுறையில் மும்பை வந்த விஜய் அங்கு நடக்கும் அசம்பாவிதங்கள் தாக்குதல்கள் ஆகியவற்றை ஆராய்ந்து சரி செய்வதே படத்தின் கதைக்களம். ஷூட்டிங் செய்த பின்னர் இது தேவையில்லை என நீக்கப்பட்ட ஓர் காட்சி அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதனை ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களும் தன் எக்ஸ் தளத்தில் ஷேர் செய்துள்ளார்.

படத்தில் விஜய்யின் நண்பனாக வரும் சத்யன் சிவகுமார் மும்பையின் போலீசாக நடித்திருந்தார். நீக்கப்பட்ட காட்சியில் சத்யன் சிவகுமாருடன் நடிகர் விஜய் காவல் நிலையத்துக்கு சென்று நகைச்சுவை செய்துள்ளார். மிகவும் பிரபலமான கவுண்டமணி – செந்திலின் வாழைப்பழம் காமெடியை விஜய் அங்குள்ள மும்பை போலீசாருக்கு ஹிந்தியில் சொல்லி சிரித்துக் கொண்டிருப்பார். இந்தக் காட்சி தான் படத்தில் இருந்து நீக்கப்பட்டது.

- Advertisement -

அது 12 ஆண்டுகள் கழித்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. படம் விறுவிறுப்பாக போகும் போது எதற்கு இடையில் இப்படிபட்ட காமெடி என எண்ணி இயக்குனர் முருகதாஸ் நீக்கியுள்ளார். அவர் செய்ததும் ஒரு வகையில் நல்லது தான், காரணம் படத்தின் வேகத்தை இது நிச்சயம் குறைந்திருக்கும்.

- Advertisement -

பெரிய பிளாக்பஸ்ட்டராக அமைந்த துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் வேண்டும் என விஜய் ரசிகர்கள் அப்போது இருந்தே கேட்கின்றனர். இடையில் விஜய் – முருகதாஸ் கூட்டணி இணையவிருந்தது, ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் விஜய் அதனைக் கைவிட்டார். தற்போது துப்பாக்கி பட பாணியில் முருகதாஸ் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஓர் ஆக்க்ஷன் படத்தை இயக்கி வருகிறார். இதில் கூட துப்பாக்கி படத்தில் வில்லனாக வந்த வித்யூத் ஜம்வால் நடிக்கிறார்.

Most Popular