Saturday, October 5, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஹீரோ & வில்லன் ரெண்டும் விஜய் தான்.. கோட் படம் அழகிய தமிழ்மகன் போலவே இருக்கே.....

ஹீரோ & வில்லன் ரெண்டும் விஜய் தான்.. கோட் படம் அழகிய தமிழ்மகன் போலவே இருக்கே.. தேருமா.. ?

நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் கோட் திரைப்படம் விரைவாக உருவாக்கப்பட்டு வருப்ருது. படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தில் இருக்க அடுத்து போஸ்ட் புரொடக்ஷனுக்கு நகரவுள்ளனர். நாயகன் விஜய் இப்படத்தில் தனது பணிகள் அனைத்தும் முடித்துவிட்டு விலகினார். தற்போது அவர் அரசியலில் ஈடுபட்டுள்ளார்.

- Advertisement -

கோட் திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகிறது. விஜய்யுடன் மைக் மோகன், பிரசாந்த், பிரபு தேவா, ஸ்னேஹா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி, யோகி பாபு என பெரிய பட்டாளமே நடித்துள்ளது. இந்தப் படம் விஜய்யின் கேரியரில் சற்று வித்தியாசமாக அமர்க்களமாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

கோட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இரண்டு விஜய் ஒன்றாக நடந்து வருவது போல அமைக்கப்பட்டு இருந்தது. இதனை வைத்து தளபதி விஜய் இரு வேடங்களில் வருகிறார் என நினைத்தனர். ஆனால் அண்மையில் வெளியான செய்தியில் இரண்டு விஜய் அல்ல மொத்தம் மூன்று என புதியதொரு செய்தி தகவல் வெளியாகியுள்ளது. மெர்சல் படம் போல இருக்கும் போல.

- Advertisement -

இதில் இரண்டு விஜய் தான் முக்கிய கதாபாத்திரங்கள். ஒரு விஜய் ஹீரோ, மற்றொன்று வில்லன் விஜய். பல வருடங்கள் கழித்து நடிகர் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கு முன்பு பிரியமுடன், அழகிய தமிழ்மகன் ஆகிய படங்களில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். விஜய் ரசிகர்களும் பல ஆண்டுகளாக தளபதியை வில்லன் கெட்டப்பில் பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டனர்.

- Advertisement -

படத்தில் வில்லனாக இளம் வயது விஜய் தான் வருவார். இளமைத் தோற்றத்துக்காக அமெரிக்காவில் அதற்கான காட்சிகளை மிகச் சிறப்பாக எடிட்டிங் செய்துள்ளனர். படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் இரண்டு விஜய்யும் எதிரெதிரே மோதுகின்றனர். இந்தக் காட்சிகள் அற்புதமாக வந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறியுள்ளனர். ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இது அமையும்.

படத்தில் இறுதிக் காட்சி திருவனந்தபுரம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டை அப்பா விஜய் செயலிக்க செய்வதன் மூலம் அந்தக் காட்சி துவங்கும். இது கேட்பதற்கு வேலாயுதம் படம் போலவே இருக்கிறது. பிறகு ஸ்டேடியத்தில் அப்பா – மகன் மாறி மாறி அடித்துக் கொள்வர். இப்படியாக படம் நிறைவு பெரும்.

விஜய்க்கு எதிராக விஜய்யே நடிப்பது இது இரண்டாவது முறையாக இருக்கும். அழகிய தமிழ் மகன் படத்தில் இதற்கு முன்பு இதைச் செய்துள்ளார். அந்தப் படம் வெற்றிப்படமாக அமையாமல் இணையத்தில் ஒரு கேலிப் பொருளாகத் தான் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். அதற்க்கு பதில் சொல்லும் வகையில் கோட் படம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Most Popular