Saturday, September 14, 2024
- Advertisement -
Homeசினிமாஅட இந்த சேனலா.. பிரபல சேனலை வாங்க திட்டம்.. விஜயின் மாஸ்டர் பிளான்.?.. ஆரம்பவே அமர்க்களம்.!

அட இந்த சேனலா.. பிரபல சேனலை வாங்க திட்டம்.. விஜயின் மாஸ்டர் பிளான்.?.. ஆரம்பவே அமர்க்களம்.!

தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகராக இருக்கும் நடிகர் விஜய் அண்மையில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதன் மூலம் ஒப்புக்கொண்ட படங்களை தவிர இனி வேறு எந்த தமிழ் படங்களிலும் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ள விஜய் இனி அரசியலில் முழு கவனம் செலுத்தப் போகிறேன் என்றும் அறிக்கை விட்டிருந்தார்.

- Advertisement -

விஜயின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்திருந்தார்கள். மேலும் நடிப்பில் உச்சத்தில் இருக்கும்போது அதை விட்டு வேண்டாம் என்று விஜய் வந்தது மிகப்பெரிய விஷயம் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் அரசியலில் அடுத்த கட்ட முயற்சிகளில் நடிகர் விஜய் ஈடுபட்டு வருகிறார். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நடிகர் விஜய் நிற்கப் போவதாக கூறியிருக்கிறார். இதனால் அந்த தேர்தலில் வெற்றி பெற என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து நடிகர் விஜய் தற்போது காய் நகர்த்தி வருகிறார்.

- Advertisement -

தமிழக அரசியலை பொறுத்தவரை தங்களுடைய கருத்தை மக்களிடையே பரப்ப வேண்டும் என்றால் ஊடகம் மிகவும் ஒரு முக்கிய கருவியாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெரிய அரசியல் கட்சிகளும் தங்களுக்கு என ஒரு ஊடகங்களை வைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதன் மூலம் அவர்களுக்கு சாதகமான செய்திகளை மக்களிடையே பரப்பி வருகிறார்கள். திமுக வை பொருத்தவரை கலைஞர் டிவி, அதிமுகவை பொருத்தவரை ஜெயா மற்றும் நியூஸ் ஜெ தொலைக்காட்சிகள்,தேமுதிக பொருத்தவரை கேப்டன் டிவி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பொருத்தவரை வெளிச்சம் டிவி போன்ற பல சேனல்கள் தமிழகத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய்யும் தமது அரசியல் கருத்துக்களை மக்களிடையே பரப்புவதற்காக ஒரு செய்தி சேனலை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய சேனலை தொடங்குவதற்கு கால நேரம் ஆகும் என்பதால் ஏற்கனவே தமிழகத்தில் இருக்கும் சேனலை விலைக்கு வாங்க நடிகர் விஜய் முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மறைவையொட்டி அந்த கட்சி தற்போது சரிவை சந்தித்து வருகிறது. இந்த கட்சி நடத்திவரும் தேமுதிக தொலைக்காட்சியை நடிகர் விஜய் விலை கொடுத்து வாங்கப் போவதாக தமிழக அரசியல் வட்டாரங்களில் தகவல் தீ போல் பரவி வருகிறது. எனினும் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

Most Popular