Saturday, September 14, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாவிஜய்யை ஏமாற்றி 100 கோடிகள் வியாபாரம்.. தளபதி 69 படத்தில் இருந்து இவரை அதிரடியாக வெளியேற்றி...

விஜய்யை ஏமாற்றி 100 கோடிகள் வியாபாரம்.. தளபதி 69 படத்தில் இருந்து இவரை அதிரடியாக வெளியேற்றி விஜய்.. !

நடிகர் விஜய் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். அக்டோபர் மாதம் துவங்கிய ஷூட்டிங் வெவ்வேறு இடங்கள் என தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்குள் முழுமையாக படப்பிடிப்பு முடிக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

- Advertisement -

மறுபக்கம் விஜய் இரு மாதங்கள் முன்பு தன் அரசியல் வருகையையும் அறிவித்துவிட்டார். இதனால் கோட் படத்திற்கு பிறகு திட்டமிட்ட ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக கூறினார். தளபதி 69 திரைப்படமான அது பெரிய சிக்கலைச் சந்தித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக தளபதி 69 படத்தை இயக்குபவர்கள் இவர்களாக இருக்கலாம் என 6 – 7 பெயர்கள் இணையத்தில் பேசப்பட்டது. திரிவிக்ரம், கார்த்திக் சுப்புராஜ் ஆகிய பெயர்களும் அப்பட்டியலில் பெரிதாக பேசப்பட்டது. அனைத்துக்கும் பிறகு விஜய் – ஹெச்.வினோத் கூட்டணி உறுதியாகியுள்ளது.

- Advertisement -

கமல்ஹாசனுடன் ஒப்பந்தமான திரைப்படம் மேலும் துவங்காததால் வினோத் விஜய் பக்கம் கதை சொல்லி அவருடன் சேர்ந்துவிட்டார். இந்த காம்போவில் உருவாகும் படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் யார் என்பதை தேர்வு செய்யும் முன்பே தளபதி விஜய் தயாரிப்பாளரை பிடித்துவிட்டார்.

- Advertisement -

ஆர்.ஆர்.ஆர் படத்தை தயாரித்த தி.வி.வி.தனையா விஜய்யின் கால்ஷீட்டை கேட்டுள்ளார். அவரும் சரி என சொல்லி வாக்குக் கொடுத்துவிட்டார். ஆனால் எந்த வித பத்திரத்திலும் அதிகாரபூர்வமாக ஒப்பந்தம் செய்யவில்லை. இந்த நிலையில் விஜய்யின் படத்திற்கு முதற்கட்டமாக எந்த ஒரு பணியும் ஆரம்பிக்காமல் தனையா வியாபாரம் செய்யத் துவங்கிவிட்டார்.

விஜய்க்குத் தெரியாமல் சேட்டிலைட், டிஜிட்டல் வியாபாரத்தை மற்ற நிறுவனங்களிடம் விற்பதற்குப் பேச்சு வார்த்தைகள் மேற்கொள்வதை நடிகர் விஜய் காதுக்குச் சென்றது. பிறகு அந்த தயாரிப்பாளரை அழைத்துத் தனக்கு தெரியாமல் செய்ததை கண்டித்து, தேதி தருவதாக கூறிய முடிவைத் திரும்பப் பெற்றுவிட்டார்.

அதிகாரபூர்வ ஒப்பந்தம் எதுவும் இல்லாததால் தனையாவை அதிரடியாக நீக்கி, விஜய் சுலபமாக வெளியேறினார். அடுத்ததாக சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular