Monday, October 7, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாகோட் படத்தில் இருந்து ஒரு மாதத்திற்கு விலகல்.. ஜூன் மாதம் முழுக்க முழுக்க அரசியல் விழாக்களை...

கோட் படத்தில் இருந்து ஒரு மாதத்திற்கு விலகல்.. ஜூன் மாதம் முழுக்க முழுக்க அரசியல் விழாக்களை திட்டமிட்டுள்ள விஜய்.. !

தளபதி விஜய் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டுமென திட்டமிட்டு அதன்படி மிகச் சரியாக பணிகளை முடித்துக் கொண்டுள்ளார். தற்போது அவர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து கோட் படத்தின் ஷூட்டிங்கில் இறுதிக் கட்டப் பணிகளில் இருக்கிறார்.

- Advertisement -

கடந்த வாரம் வி.எஃப்.எக்ஸ் பணிகளுக்காக அமெரிக்கா சென்று அதனை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். இன்னும் 2 தினங்கள் மட்டுமே ஷூட்டிங் பாக்கியுள்ளது. இதனை முடித்துவிட்டு மீண்டும் படக்கிழுவுடன் ஜூலை மாதம் தான் இணைவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு காரணம் இடையில் ஒரு மாதம் ஜூனை அரசியலுக்காக ஒதுக்கியுள்ளாராம். இதனை முடித்துவிட்டு ஜூலை மாதம் டப்பிங்கிக்கு செல்வார். ஏற்கனவே கோட் படத்தின் முதல் பாதிக்கு டப் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதம் ஓரிரு பெரிய விழாக்கள், அடுத்தப் படம், பிறந்தநாள் என விஜய் ஒரே பிஸி.

- Advertisement -

முதற் பணியாக கல்வி விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளார் விஜய். 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மூன்று மாணவர்களை மாவட்ட வாரியாக அழைத்து அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி சிறப்பிப்பார். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட விழாவுக்கு பெரிய வரவேற்பு மற்றும் விஜய்க்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரும் கிடைத்தது. அரசியலைத் தாண்டி நல்லது செய்த மனதிற்கு பாராட்டுகள்.

- Advertisement -

இந்த ஆண்டு சிறந்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மட்டுமில்லாமல் ஏழை மாணவர்கள், ஊனமுற்ற மாணவர்கள் ஆகியோரின் மேற் படிப்புக்கு உதவ திட்டமிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பெரிய மாநாடு ஒன்றை நடத்தவுள்ளதாக பல வாரங்கள் முன்பு செய்திகள் வந்தன. இது குறித்து கட்சியில் ஆலோசனை செய்வர்.

ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளில் அடுத்தப் படத்தின் அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளியாகவுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அரசியல் களம் கொண்ட படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை முடித்துவிட்டு முழு நேரமும் அரசியலில் குதிப்பதாக விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார், அதன் படி நடப்பார்.

Most Popular