Tuesday, November 19, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமா10 லட்சம் மக்கள் அமர்ந்து பார்க்க.. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பிரம்மாண்ட மாநாடு.. எங்கு...

10 லட்சம் மக்கள் அமர்ந்து பார்க்க.. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பிரம்மாண்ட மாநாடு.. எங்கு எப்போது என்ற தகவல் வெளியீடு.. !

தளபதி விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தன் அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதற்காக இன்னும் 2 படங்களுடன் சினிமாவில் இருந்து முழுமையாக விலகுவதாகவும் அறிவித்தார். ஒரு பக்கம் சினிமாவில் நடித்துக் கொண்டே கட்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் தன் பணிகள் முழுவதையும் முடித்துவிட்டு கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த மாதம் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு, பொறுப்புகள் பகிர்ந்துக் கொடுப்பது, கல்வி விழா ஆகியற்றை பற்றி ஆலோசிக்க கூடினர்.

இந்த மாதம் கடைசி மற்றும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்றோர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர். அதன் பின்னர் மாநாடு பணிகளில் ஈடுபட உள்ளனர். கட்சியின் முதல் மாநாட்டை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த விஜய் பல்வேறு இடங்களை பார்த்துக் கொண்டுள்ளார்.

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்னும் 2 மாதங்களில் நடக்கிறது. கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிய பின்பே இந்த நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். செப்டம்பர் 21ஆம் தேதி முகூர்த்த நாள் என்பதால் அதில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் திருச்சியில் நடத்திய நிகழ்ச்சியைப் போலவே 10 லட்சம் மக்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் தயார் செய்கின்றனர்.

- Advertisement -

த.வெ.க கட்சியின் நோக்கம் 2026 தேர்தல் என்பதால் இடைத் தேர்தல்களில் போட்டியிடவில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். செப்டம்பர் மாதம் மாநாட்டில் கொள்கைகளை விளக்கி அங்கிருந்து தொடந்து அரசியலில் ஈடுபடவுள்ளார். இதனால் தளபதி 69 படம் கைவிடப் போவதாகவும் சில தகவல்கள் பரவி வந்தன. ஆனால் அது உண்மையல்ல, ஹெச்.வினோத் இயக்கத்தில் அக்டோபர் மாதம் அந்தப் படம் துவங்கவுள்ளது.

விரைவில் தளபதி 69 படத்தை முடித்துவிட்டு 2026 தேர்தலுக்காக ஓர் ஆண்டு அரசியல் பணிகள் மேற்கொள்வார் தளபதி விஜய். சமுதாயத்தில் மாற்றத்தை உண்டாக்குவதும் மக்கள் நலனுக்காக முழு நேரத்தையும் ஒதுக்குவதாகவும் அவர் ஏற்கனவே தெரிவித்தார்.

Most Popular