வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தின் பணிகள் பரபரப்பாக நடந்துக் கொண்டுள்ளது. தளபதி விஜய் தன் பணிகளை நிறைவு செய்துவிட்டு அரசியல் பணிகள் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். படக்குழு மிச்சமுள்ள சில காட்சிகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக இருக்கிறது.
இந்தப் படத்தில் மூன்று பெரிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று, மறைந்த பவதாரபியின் குரலை யுவன் பாட்டில் பயன்படுத்துவது. அடுத்ததாக விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன் ஆகியோருக்கு டீ-ஏஜிங் செய்யபட்டு வருகிறது. இதற்காக படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நிறுவனம் இந்த எடிட்டிங் பணிகால் 70% முடிந்துவிட்டது, ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் அனைத்தும் படக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் என உறுதியும் அளித்துள்ளனர்.
மற்றொரு தொழில்நுட்பம் ஏ.ஐ வைத்து மறைந்த விஜயகாந்த் அவர்களை மீண்டும் திரைக்கு கொண்டு வருவது தான். அவர் இறந்த உடனே இதனை வெங்கட் பிரபு முடிவு செய்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிடம் அனுமதி பெற்றார். எந்த மாதிரியான எடிட்டிங் என்பதை ஓர் வீடியோ போல அமைத்து அவரிடம் காட்டியுள்ளார் வெங்கட் பிரபு.
படத்தில் கேப்டனின் காட்சிகளை சேர்ப்பதற்கு முன்பு தன்னிடம் காட்ட வேண்டுமென ஓர் கட்டளையை இட்டு சம்மதித்தார். அதன் படி வெங்கட் பிரபு அனைத்துப் பணிகளையும் முடித்து பிரிமலதாவிடம் எடிட் செய்த காட்சிகளை காண்பித்தார். விஜயகாந்த் குடும்பத்தினர் அனைவரும் அதனைப் பார்த்து வியந்து மகிழ்ந்தனர்.
ஆனால் இவர்களைத் தாண்டியும் படத்தில் சேர்ப்பதற்கு முன் வெங்கட் பிரபு மற்றொரு கன்டிஷனை எதிர் கொண்டுள்ளார். அதாவது கதாநாயகன் விஜய் அனைத்துக் காட்சிகளையும் பார்த்து அவருக்குப் பிடித்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென உத்தரிவிட்டார். அவர் கூறியதாவது, ” இந்த எடிட்டிங் காட்சிகள் மட்டும் கூடுதல் கவனத்தோடு செய்யுங்கள். ஒருவருக்கு கூட கேப்டன் பொம்மை போல உள்ளார் என்ற எண்ணத்தை வரவழைக்க கூடாது. ” என்றார்.
விஜய்யை வளர்த்தவர் கேப்டன் விஜயகாந்த். அந்த நன்றியை மறவாதவர் தளபதி விஜய். அவர் இறந்த பின்பு அவரது காட்சிகளை பயன்படுத்தி அது ஒரு வேளை கேலிப் பொருளாக மாறினால் அது பெரிய மனக் கஷ்டத்தைக் கொடுக்கும். இதனால் கூடுதல் கவனத்தோடு இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.